Vivo Z1x-ன் 8 ஜிபி ரேமுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 128 ஜிபி onboard ஸ்டோரேஜுடன் வருகிறது.
இந்தியாவில் Vivo Z1x-ன் விலை:
இந்தியாவில் Vivo Z1x-ன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை 21,990 ரூபாய். தொலைபேசி Fusion Blue நிறத்தில் வருகிறது. நினைவுகூர, Vivo கடந்த மாதம் Vivo Z1x-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் 16,990 ரூபாய் ஆரம்ப விலையாக அறிவித்து. நிறுவனம் தனது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜை ரூ. 18.990-க்கு விற்பனை செய்கிறது. இரண்டு வகைகளும் Fusion Blue மற்றும் Phantom Purple நிறங்களில் வருகின்றன.
Vivo Z1x-ன் 8 ஜிபி ரேமை, எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக்கை விற்பனை சலுகையாக வழங்கும். 10 சதவீத HDB கேஷ்பேக்கும் உள்ளது. இந்த சலுகைகள் அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும். மேலும், புதிய ஸ்மார்ட்போன் இன்று முதல், நாட்டின் பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Vivo Z1x-ன் சிறப்பம்சங்கள்:
டூயல் சிம் (நானோ) Vivo Z1x-ன், Funtouch OS 9.1 உடன் உடன் Android 9 Pie இயங்குகிறது. 6.38-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்பிளேவுடன் 19.5:9 aspect ratio மற்றும் waterdrop-style display notch ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி 6 ஜிபி மற்றும் 8 ஜிபி RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 712 AIE SoC-யால் இயக்கப்படுகிறது. முன்பே ஏற்றப்பட்ட (preloaded) Multi-Turbo மற்றும் Ultra Game Mode ஆகியவை உள்ளன.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo Z1x f/1.79 lens உடன் 48-megapixel Sony IMX582 முதன்மை சென்சாரோடு triple rear கேமரா அமைப்பை உள்ளடக்கியுள்ளது. f/2.2 lens (120-degree wide-angle) உடன் 8-megapixel சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel depth சென்சார் ஆகிய கேமரா சென்சார்கள் அடங்கும். செல்ஃபிக்களுக்கு, f/2.0 lens உடன் 32-megapixel கேமரா சென்சார் உள்ளது.
64 ஜிபி மற்றும் 128 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் விருப்பங்களை Vivo Z1x கொண்டுள்ளது. இவை இரண்டும் microSD card விரிவாக்கத்தை ஆதரிக்காது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, GPS/ A-GPS, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். accelerometer, ambient light sensor, in-display fingerprint சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். தவிர, தொலைபேசி 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்