Vivo Z1x ஸ்மார்ட்போன்களில் 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு வகை 16,990 ரூபாய் என்ற விலையில் அறிமுகம்.
Vivo Z1x ஸ்மார்ட்போன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது.
Vivo Z1x இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Z5 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக தெரிகிறது. Vivo Z1x ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் 48 மெகாபிக்சல் சென்சாருடன் 3 பின்புற கேமரா அமைப்பு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவை ஆகும். இந்தியாவில் Vivo Z1x விலை, வெளியீட்டு தேதி, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சலுகைகள் போன்ற வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் உள்ளே...
இந்தியாவில் இன்று அறிமுகமான Vivo Z1x ஸ்மார்ட்போன்களில் 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு வகை 16,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றும் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு வகை 18,990 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. விவோ நிறுவனம் 8GB RAM வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Fusion Blue) மற்றும் ஊதா (Phantom Purple) என்ற இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Vivo Z1x விற்பனை சலுகைகளாக எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 1,250 தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் 6,000 ரூபாய் வரை சலுகைகளை வழங்கவுள்ளது. 6 மாதங்கள் வரை கட்டணமில்லாத ஈ.எம்.ஐ.களும் இந்த ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 9.1-ஐ மையப்படுத்தி ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. சூப்பர் AMOLED திரை மற்றும் வாட்டர்-ட்ராப் நாட்ச் ஆகிய அம்சங்களுடன் 6.38-இன்ச் full-HD+ (1080x2 340 பிக்சல்கள்) திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Vivo Z1x ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் 120 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
![]()
இந்த ஸ்மார்ட்போன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், USB டைப்-C போர்ட், GPS, மற்றும் 4G LTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Moto Buds 2 Fusion India Launch Date Announced; Key Specifications Teased