விவோ ஒய் 70 எஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாம்சங் எக்ஸினோஸ் 880 செயலியுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். விவோ பிராண்டின் 5 ஜி போனில் 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன.
6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo Y70s விலை சிஎன்ஒய் 1,998 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,200)-யில் தொடங்குகிறது. போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் சிஎன்ஒய் 2,198 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,300)-க்கு விற்கப்படும் . இந்த ஸ்மார்ட்போன் ஃபாக் அலுஷன், ஸ்டார்லைட் ப்ளூ மற்றும் மூன் ஷேடோ பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.
டூயல்-சிம் (நானோ) விவோ ஒய் 70 எஸ் 6.53 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஆக்டா கோர் எக்ஸினோஸ் 880 செயலியைப் பயன்படுத்துகிறது. மாலி-ஜி 76 எம்பி 5 கிராபிக்ஸ் பிராசசர் மற்றும் 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் ஃபன்டூச் ஓஎஸ் 10-ல் இயங்குகிறது.
போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது
இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 18W இரட்டை இயந்திரம் ஃபிளாஷ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Vivo ஒய் 70 எஸ் எடை 190 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்