Photo Credit: Vivo
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo Y19s செல்போன் பற்றி தான்.
Y சீரியஸ் செல்போன் வரிசையில் Vivo Y19s செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 8GB RAM மற்றும் 128GB மெமரியுடன் வருகிறது. ஆக்டா கோர் யூனிசாக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6.68 இன்ச் எல்சிடி திரையுடன் வருகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது. 50 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இது 5,500mAh பேட்டரியை பெற்றிருக்கும் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. Vivo Y19s ஆனது நிறுவனத்தின் Funtouch OS 14 ஸ்கின் உடன் Android 14 மூலம் இயங்குகிறது.
Vivo Y19s செல்போன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர்களில் இன்னும் பட்டியலிடப்படவில்லை. இது பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, வியட்நாம், மியான்மர், பாகிஸ்தான், சவுதி அரேபியா, கம்போடியா, எகிப்து, தாய்லாந்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளி வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவில் Vivo Y19s செல்போன் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து எந்த தகவலும் இல்லை.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Y19s ஆண்ட்ராய்டு 14 அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14 மூலம் இயங்கும் இரட்டை சிம் செல்போன் ஆகும். இது 6.68-இன்ச் HD+ (720x1,608 பிக்சல்கள்) LCD திரையுடன் 90Hz புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது. இதன் பிக்சல் அடர்த்தி 264ppi இருக்கும். 12nm ஆக்டா கோர் யூனிசாக் T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6GB LPDDR4X RAM உடன் வருகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகள் முன்பக்கம் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.
Vivo Y19s செல்போன் 128GB eMMC 5.1 மெமரியுடன் வருகிறது. இதை MicroSD கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்க முடியும். 4G LTE, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2 மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றிற்கான சப்போர்ட் இருக்கிறது. போர்டில் உள்ள சென்சார்களில் முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி உணரி, இ-காம்பஸ், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் மெய்நிகர் கைரோஸ்கோப் ஆகியவை உள்ளன.
5,500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. சார்ஜிங் அடாப்டர் மூலம் 15W திறனில் சார்ஜ் செய்ய முடியும். தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் கிடைக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. இது 198g எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்