இந்தியாவில் Vivo Y19-ன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 13,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Vivo Y19, 19.5:9 aspect ratio உடன் full-HD+ டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது
Vivo Y19 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ தொலைபேசி, ஆரம்பத்தில் நாட்டில் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட்போன் waterdrop-style display notch மற்றும் triple rear கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Vivo Y19, gradient back finish-ஐக் கொண்டுள்ளது. மேலும், தொலைபேசி - பல பட்ஜெட் மாடல்களைப் போலவே - rear-mounted fingerprint உடன் வருகிறது மற்றும் பின்புறத்தில் விவோவின் பிராண்டிங்கைக் கொண்டுள்ளது. Vivo Y19 சீனாவில் Vivo Y5s-ஆக கிடைக்கிறது.
இந்தியாவில் Vivo Y19-ன் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:
இந்தியாவில் Vivo Y19-ன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 13,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டின் பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் Magnetic Black மற்றும் Spring White நிறங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. மேலும், இது Amazon.in, Flipkart, Paytm மற்றும் Tata Cliq உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் நவம்பர் 20, புதன்கிழமை முதல் விற்பனைக்கு வரும்.
Vivo Y19-ன் வெளியீட்டு சலுகைகளில் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகளில் ஐந்து சதவிகித கேஷ்பேக் மற்றும் கிரெடிட் கார்டு டவுன்-பேமென்ட் மூலம் எச்டிபி பேப்பர் ஃபைனான்ஸில் 10 சதவிகித கேஷ்பேக் ஆகியவை அடங்கும். மேலும், விவோ பஜாஜ் நிதி மற்றும் எச்.டி.எஃப்.சி பேப்பர் நிதி மூலம் கிடைக்கும் பூஜ்ஜிய டவுன்-பேமென்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போனில் 12 மாதங்கள் வரை விலை இல்லாத EMI விருப்பங்களும் உள்ளன. மேலும், ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து ரூ. 6,000 பலன்களும் உள்ளது.
நினைவுகூர, Vivo Y19-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்காக THB 6,999 (சுமார் ரூ.16,600)-யாக தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Vivo Y5s-ன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு விருப்பத்திற்கான CNY 1,498 (சுமார் ரூ. 15,300) விலைக் குறியுடன் சமீபத்தில் சீன சந்தையை அடைந்தது.
Vivo Y19-ன் சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Vivo Y19, Funtouch OS 9.2 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) Halo FullView டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio P65 SoC-யால் இயக்கப்படுகிறது. கேமிங் அனுபவங்களை மேம்படுத்த Ultra Game Mode உடன் இந்த போன் முன்பே ப்ரீலோட்டட் செய்யப்பட்டுள்ளது.
Vivo Y19-ன் triple rear கேமரா அமைப்பில், f/1.78 lens உடன் 16-megapixel முதன்மை சென்சார், wide-angle f/2.2 lens உடன் 8-megapixel சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், f/2.0 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது.
Vivo Y19-ல் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் Micro-USB 2.0 ஆகியவை அடங்கும். இந்த போன் 18W Dual-Engine வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
தவிர, Vivo Y19, 162.15×76.47×8.89mm அளவீட்டையும், 193 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications