3GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'விவோ Y12' ஸ்மார்ட்போனின் விலை 11,990 ரூபாய்.
முன்னதாக கடந்த மாதம் 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்ட 'விவோ Y12' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
3GB RAM கொண்ட விவோ Y12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக 4GB RAM விவோ Y12 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப்பின் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. RAM தவிர்த்து கடந்த மாதம் அறிமுகமான விவோ Y12 ஸ்மார்ட்போனிற்கும், தற்போது அறிமுகமாகியுள்ள விவோ Y12 ஸ்மார்ட்போனிற்கும் பெரிதாக எந்த ஒரு வேறுபாடும் இல்லை. 5,000mAh பேட்டரி, மூன்று பின்புற கேமரா, 6.35-இன்ச் திரை போன்ற அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன?
'விவோ Y12': விலை!
தற்போது 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'விவோ Y12' ஸ்மார்ட்போனின் விலை 11,990 ரூபாய். முன்னதாக கடந்த மாதம் 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு இந்த ஸ்மார்ட்போனின் ஒரு வகை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஸ்மார்ட்போனின் விலை 12,490 ரூபாய்.
இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Aqua Blue) மற்றும் சிவப்பு (Burgundy Red) என இரு வண்ணங்களில் விற்பனையில் உள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் நாட்டின் முன்னனி ஸ்மார்ட்போன் வனிகர்களின் கடைகளில் கிடைக்கப்பெரும்.
'விவோ Y12': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.35-இன்ச் HD+ (720x1544 பிக்சல்கள்) திரை, 19.3:9 திரை விகிதம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், வாட்டர் ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
3 பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, மற்றும் 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
5,000mAh பேட்டரி வசதியையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதுமட்டுமின்றி 4G, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 வசதிகளையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked