waterdrop-style display notch உடன் HD+ டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது Vivo Y11 (2019)
Vivo Y11 (2019) வியட்நாமில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய Vivo போன் waterdrop-style டிஸ்பிளேவைக் கொண்டுதோடு, gradient back finish உடன் இரண்டு நிறங்களில் வருகிறது.
விலை:
Vivo தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, வியட்நாமில் Vivo Y11 (2019)-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை VND 2,990,000 (தோராயமாக ரூ .9,200) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Coral Red மற்றும் Jade Green நிறத்தில் வருகிறது.
Vivo Y11 (2019)-ன் உலகளாவிய வெளியீடு மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதுவரை Vivo-வின் கவனத்தை கருத்தில் கொண்டு, புதிய தொலைபேசி இந்தியா, சீனா போன்ற சந்தைகளுக்கு எதிர்காலத்தில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Vivo Y11 (2019) FuntouchOS 9.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.35-inch HD+ (720x1544 pixels) டிஸ்பிளேவுடன் waterdrop-style notch ஆகிய அம்சங்கள் உள்ளன. ஹூட்டின் படி, 3GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo Y11 (2019)-ல் f/2.2 lens உடன் 13-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel secondary சென்சார் ஆகியவற்றைக் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் f/1.8 lens உடன் 8-megapixel selfie கேமரா சென்சார் உள்ளது.
Vivo Y11 (2019) 32 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரெஜைக் கொண்டுள்ளது. தொலைபேசியின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவற்றைக் கொண்ட சென்சார்களின் வரிசையும் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது.
Y11 (2019)-ல் 5,000mAh பேட்டரியை Vivo வழங்கியுள்ளது. தவிர, தொலைபேசி 159.43x76.77x8.92mm அளவீடையும்யும், 190.5 கிராம் எடையையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.