Vivo Y11 (2019)-யின் விலை இந்தியாவில் ரூ. 8,990 ஆகும்.
Vivo Y11 (2019), Red Coral மற்றும் Green Jade வண்ண விருப்பங்களில் வருகிறது
விவோ, இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது - Vivo Y11 (2019). இந்த போன் அக்டோபர் மாதம் மீண்டும் வியட்நாமில் வெளியிடப்பட்டது. இப்போது, Vivo Y11 (2019) விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று விவோ கேஜெட்ஸ் 360-க்கு கூறுகிறது.
மகேஷ் டெலிகாம் முதன்முதலில் Vivo Y11 (2019)-க்கான மார்க்கெட்டிங் போஸ்டர் அதன் முக்கிய விவரக்குறிப்புகளை விவரித்தது. பின்னர், இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை விவோ, கேஜெட்ஸ் 360 க்கு உறுதிப்படுத்தியது. Vivo Y11 (2019) விலை இந்தியாவில் 8,990 ரூபாய் ஆகும். Vivo Y11 (2019) Red Coral மற்றும் Green Jade வண்ண விருப்பங்களில் வருகிறது. இருப்பினும், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்த போனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவில்லை. மேலும், அதன் விலை மற்றும் சந்தையில் கிடைக்கும் விவரங்கள் குறித்து நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த வார்த்தையும் இல்லை.
டூயல்-சிம் (நானோ) Vivo Y11 (2019) Funtouch OS 9.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது waterdrop notch உடன் 6.35-inch HD+ (720x1544 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 3GB RAM உடன் octa-core Qualcomm Snapdragon 439 SoC -யில் இருந்து சக்தியை ஈர்க்கிறது.
Vivo Y11 (2019)-யின் f/2.2 aperture உடன் 13-megapixel பிரதான கேமரா மற்றும் portrait shots-க்கு f/2.4 lens உடன் 2-megapixel depth சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக, முன்பக்கத்தில் f/1.8 lens உடன் 8-megapixel கேமரா உள்ளது. இதில், 32GB ஆன்போர்டு ஸ்டோரேஜும் உள்ளது. அதே சமயம், அங்கிகாரத்திற்காக rear-mounted fingerprint சென்சார் உள்ளது.
Vivo Y11 (2019)-ன் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனின் சென்சார்களில் accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். இந்த விவோ போன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Hubble Data Reveals Previously Invisible ‘Gas Spur’ Spilling From Galaxy NGC 4388’s Core
Dhurandhar Reportedly Set for OTT Release: What You Need to Know About Aditya Dhar’s Spy Thriller
Follow My Voice Now Available on Prime Video: What You Need to Know About Ariana Godoy’s Novel Adaptation
Rare ‘Double’ Lightning Phenomena With Massive Red Rings Light Up the Alps