5,000mAh பேட்டரியுடன் வெளியானது Vivo Y11 (2019)!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 டிசம்பர் 2019 15:49 IST
ஹைலைட்ஸ்
  • Vivo Y11 (2019) ஆஃப்லைன் & ஆன்லைன் சேனல்கள் வழியாக விற்பனை செய்யப்படும்
  • இந்த விவோ போன் Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது
  • Vivo Y11 (2019) Mineral Blue மற்றும் Agate Red வண்ணங்களில் வழங்கப்படும்

Vivo Y11 (2019) டிசம்பர் 28 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்

Vivo Y11 (2019) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சேனல்கள் வழியாக விற்பனைக்கு வரும். இந்த போன் முதன்முதலில் அக்டோபர் மாதம் வியட்நாமில் வெளியிடப்பட்டது. 


இந்தியாவில் Vivo Y11 (2019)-ன் விலை, விற்பனை தேதி, சலுகைகள்:

Vivo Y11 (2019)-ன் ஒரே 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 8,990-யாக விலையிடப்படுள்ளது. இந்த போன், நாடு முழுவதும் உள்ள offline channels, Vivo India e-store, Amazon.in, Paytm Mall, Tata Cliq மற்றும் Bajaj EMI E-Store மூலம் கிடைக்கும். இந்த போன் டிசம்பர் 25 முதல் கிடைக்கும். ஆனால், பிளிப்கார்ட்டில் டிசம்பர் 28 முதல் விற்பனைக்கு வரும். Vivo Y11 (2019) Mineral Blue மற்றும் Agate Red வண்ண விருப்பங்களில் வழங்கப்படும்.

Vivo Y11 (2019)-ன் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Vivo Y11 (2019) Funtouch OS 9.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது waterdrop notch உடன் 6.35-inch HD+ (720x1544 pixels) LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 3GB RAM உடன் octa-core Qualcomm Snapdragon 439 SoC -யில் இருந்து சக்தியை ஈர்க்கிறது. Vivo Y11 (2019)-ல், 32GB ஆன்போர்டு ஸ்டோரேஜும் உள்ளது.

Vivo Y11 (2019)-யின் f/2.2 aperture உடன் 13-megapixel பிரதான கேமரா மற்றும் portrait shots-க்கு f/2.4 lens உடன் 2-megapixel depth சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக, முன்பக்கத்தில் f/1.8 lens உடன் 8-megapixel கேமரா உள்ளது. இதன் பின்புற கேமரா flash-ஐ ஆதரிக்கிறது. கேமரா அம்சங்களில் professional mode, PDAF, palm capture, voice control, time-lapse, slow, live photos, HDR, panorama, portrait bokeh (rear camera), watermark, AI Face Beauty மற்றும் camera filters ஆகியவை அடங்கும்.

Vivo Y11 (2019)-யின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனின் சென்சார்களில் accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். இந்த விவோ போன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும். இந்த போன் 159.43x76.77x8.92mm அளவீடையும், 190.5 கிராம் எடையையும் கொண்டதாகும். Vivo Y11 (2019)-ல் அங்கிகாரத்திற்காக rear-mounted fingerprint சென்சார் உள்ளது.

Vivo Y11 (2019) Launched in Vietnam

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  2. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  3. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  4. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
  5. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  6. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  7. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  9. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  10. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.