ஆண்ட்ராய்டு ஸ்மாரட்போன்களில் கேமராவில் சிறப்பு பெற்றது விவோ ஸ்மார்ட்போன்தான். கடந்த வாரம் இந்தியாவில் விவோ X50, விவோ X50 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது அந்நிறுவனம். இது அறிமுகமாகுவதற்கு முன்பே விவோ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், விவோ X50 மற்றும் X50 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.56 இன்ச் திரை, 90Hz ரெவ்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இருப்பினும் பின்புற கேமராக்கள், பேட்டரி, பிராசசர் உட்பட சில விஷயங்களில் வித்தியாசப்படுகின்றன.
விலை:
128ஜிபி மெமரி கொண்ட விவோ X50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,990 என்றும், 256 ஜிபி மெமரி கொண்ட விவோ X50 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,990 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஃப்ரோஸ்ட் புளூ, கிளேஸ் பிளாக் ஆகிய நிற வேரியன்டுகளில் விவோ X50 உள்ளது. சிங்கிள் ஆல்பா கிரே கலரில் விவோ X50 ப்ரோ உள்ளது.
சிறப்பம்சங்கள்:
விவோ X50 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 730 SoC பிராசசரும், விவோ X50 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 765 SoC பிராசசரும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு போன்களும 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி உள்ளன.
விவோ X50 ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. அதாவது, சோனி IMX598 சென்சாருடன் 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சலுடன் சூப்பர் வைட் ஆங்கிள் கேமரா, 13 மெகா பிக்சலுடன் பொக்கே சூட் கேமரா, 8 மெகா பிக்சல் டெலிஸ்கோபிக் ஹைபிரிட் ஜூம் கேமரா உள்ளன. பிரைமரி கேமராவில் கிம்பல் ஸ்டேபிள் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
விவோ X50 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் இதே போன்று கேமராக்கள் உள்ளன. ஆனால், அவற்றின் தரம் இன்னும் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் கேமரா 60x ஹைபிரிட் ஜூம் உள்ளது. ஆனால், விவோ X50 போனில் 20x ஜூம் மட்டும் உள்ளது. போட்டோக்கள், வீடியோக்கள் நல்ல தரமாக எடுப்பதற்கு விவோ X50 ப்ரோ வாங்கலாம்.
இரண்டு போன்களிலும் 33 வாட் சார்ஜர் வழங்கப்படுகின்றன. ஆனால், பேட்டரி சக்தியைப் பொறுத்தவரையில் விவோ X50 ஸ்மார்ட்போனில் 4,200mAh பேட்டரியும், ப்ரோ ஸ்மார்ட்போனில் 4,315mAh பேட்டரியும் உள்ளன.
வாடிக்கையாளர்கள் விவோ X50, விவோ X50 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஆன்லைனிலும், ஆஃப்லைனில் ஷோரூம்களிலும் வாங்கலாம். ஆன்லைன் எனும் போது ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால், டாட்டா கிளிக் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கின்றன. அமேசான் பிரைம் டே சேல் அடுத்த மாதம் வரவுள்ளது. அதில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர் இருக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்