Vivo X300 Pro ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன், 200MP Telephoto கேமரா, 16GB RAM மற்றும் Dimensity 9500 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Photo Credit: Vivo
Vivo X300 Pro 5G: 200MP டெலிஃபோட்டோ கேமரா, 6.78" AMOLED டிஸ்ப்ளே, 6,510mAh பேட்டரி, ₹1,09,999 விலை
இப்போ ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுல கேமரான்னா அது Vivo-தான்! அவங்களுடைய X-சீரிஸ் ஃபிளாக்ஷிப் போன்கள் எப்பவுமே ஒரு கேமரா மாஸ்டர்பீஸ் மாதிரி இருக்கும். இப்போ, அந்த வரிசையில இந்தியால ஒரு மாஸ்ஸான போனை லான்ச் பண்ணிருக்காங்க. அதான் Vivo X300 Pro!
இந்த போன், கேமராவுல ஒரு புது ரெவொல்யூஷனைக் கொண்டு வந்திருக்குன்னே சொல்லலாம். விலையைப் பத்தி முதல்ல பார்த்தா, இந்த போன் 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியன்ட்ல தான் வந்திருக்கு. இதோட விலை ₹1,09,999! இது Samsung Galaxy S25 Ultra மற்றும் iPhone 16 Pro மாடல்களுக்கு நேரடியான சவால் விடுற ஒரு அல்ட்ரா-ப்ரீமியம் செக்மென்ட்!
இந்த போனின் பெரிய ஹைலைட்டே கேமராதான்! இதுல மொத்தம் மூணு கேமரா செட்டப் இருக்கு. மெயின் கேமரா 50MP (Sony LYT-828 சென்சார்), 50MP அல்ட்ரா-வைட் கேமரா இருக்கு. ஆனா, இதுல ஸ்பெஷல் என்னன்னா, 200-மெகாபிக்ஸல் ரெசல்யூஷன் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இருக்கு! 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x வரை டிஜிட்டல் ஜூம் வசதி இதுல இருக்கு. தூரமா இருக்குற காட்சிகளைக்கூட, 200MP துல்லியத்துல படம் எடுக்கலாம்! அதுமட்டுமில்லாம, கேமரா பெர்ஃபார்மன்ஸை அதிகரிக்க Vivo-வோட V3+ மற்றும் Vs1 அப்படிங்கிற ரெண்டு பிரத்யேக இமேஜிங் சிப்களையும் இதுல கொடுத்திருக்காங்க!
இந்த போன்ல ZEISS நிறுவனத்தோட பார்ட்னர்ஷிப் தொடருது. அதன் மூலமா, Professional-ஆன போட்ரேட் மோடுகள் மற்றும் 'Telephoto Bird Shots' போன்ற புதிய அம்சங்களும் இதுல இருக்கு. தேவைப்பட்டா, ZEISS 2.35x Telephoto Extender Kit-ஐயும் ₹18,999-க்கு தனியா வாங்கி, ஜூம் திறனை மேலும் அதிகரிக்கலாம்!
பெர்ஃபார்மன்ஸ் பக்கம் வந்தா, இதுல MediaTek Dimensity 9500 சிப்செட் இருக்கு. இது ஒரு 3nm ஃபிளாக்ஷிப் புராசஸர். 16GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் இருக்கு. சாஃப்ட்வேர்ல Android 16 அடிப்படையிலான OriginOS 6 இருக்கு.
பேட்டரி! இதுல 6,510mAh பெரிய பேட்டரி இருக்கு. இது டாப்-எண்ட் போன்கள்லயே ரொம்பவே பெரிய பேட்டரின்னு சொல்லலாம். அதுவும் 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டோட வருது! ஒரு நாள் ஃபுல்லா கனெக்டிவிட்டிய யூஸ் பண்ணாலும், பேட்டரி பத்தி பயப்படத் தேவையில்லை.
அடுத்த முக்கியமான அம்சங்கள் என்னென்னன்னு பார்த்தா, 6.78-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே (120Hz), IP68 மற்றும் IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங், Wi-Fi 7 மற்றும் Ultrasonic இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற அனைத்து ஃபிளாக்ஷிப் அம்சங்களும் இருக்கு.
இந்த Vivo X300 Pro-ன் ப்ரீ-புக்கிங் இப்போ ஆரம்பிச்சிருக்கு, டிசம்பர் 10 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த விலையில இந்த போன் வாங்குவீங்களா இல்லையான்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supermoon and Geminid Meteor Shower 2025 Set to Peak Soon: How to See It
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected