ரிலீஸுக்கு முன்பே லீக்கான Vivo X30 Pro-வின் விவரங்கள்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 டிசம்பர் 2019 16:53 IST
ஹைலைட்ஸ்
  • Vivo X30 Pro 5G, 6.44-inch FHD+ E3 AMOLED டிஸ்பிளேவுடன் வரும்
  • Vivo X30 Pro, Samsung Exynos 980 chipset மூலம் இயக்கப்படுகிறது
  • இந்த ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு இருக்கும்

Vivo X30 Pro, 4,350mAh பேட்டரியுடன் 33W வரை ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும்

Photo Credit: Weibo

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனான Vivo X30 Pro, அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக அதன் விவரக்குறிப்புகள் கசிந்து வருவதைக் கண்டிருக்கிறது. Vivo X30 Pro மற்றும் Vivo X30 ஆகியவை சீனாவில் இன்று இரவு 7:30 மணிக்கு CST ஆசியா (மாலை 5:00 மணி IST)-க்கு தொடங்கும். Vivo X30-சீரிஸின் அறிமுகத்திற்கு முன்னதாக, Vivo X30-யில் இருந்து பயனர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் Pro வேரியண்ட்டில் இப்போது வரை அதிகம் வெளிவரவில்லை.


Vivo X30 Pro-வின் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

Vivo X30 Pro, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Samsung Exynos 980 chipset மூலம் இயக்கப்படும். மேலும், Android 9 Pie-ல் இயங்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, டிஸ்பிளே 6.44-inch with 2400x1080 pixels screen resolution உடன் இருக்கும். மேலும் ,அதன் மேல் வலது மூலையில் hole punch இருக்கும்,.அங்கு முன் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். punch hole-ன் விட்டம் 2.98mm இருக்கும்.

வெய்போவில் ஒரு டிப்ஸ்டரின் பதிவின் படி, Vivo X30 Pro, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முதன்மை கேமராவுக்கு 32 மெகாபிக்சல் secondary shooter, 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் கேமரா உதவும். Electronic Image Stabilisation மற்றும் Optical Image Stabilisation போன்ற அம்சங்களும் இருக்கும் என்று கசிவு தெரிவிக்கிறது. Vivo X30 சீரிஸ் கேமராவில் 60x super zoom வரை ஆதரவு இருக்கும் என்று விவோ ஏற்கனவே அதிகாரப்பூர்வ டீஸரில் வெளிப்படுத்தியுள்ளது.

கூடுதலாக, இந்த போன் 4,350mAh பேட்டரியுடன் 33W வரை ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும். Vivo X30 Pro-வின் அம்சங்களில் dual 5G ஆதரவு மற்றும் NFC ஆகியவை அடங்கும்.

 
KEY SPECS
Display 6.44-inch
Processor Samsung Exynos 980
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 32-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo X30 Pro, Vivo X30 Pro Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.