Vivo X30 Pro, மேல் வலது மூலையில் hole punch உடன் 6.44-inch full-HD+ E3 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்.
Photo Credit: Weibo
Vivo X30 Pro, 4,350mAh பேட்டரியுடன் 33W வரை ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனான Vivo X30 Pro, அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக அதன் விவரக்குறிப்புகள் கசிந்து வருவதைக் கண்டிருக்கிறது. Vivo X30 Pro மற்றும் Vivo X30 ஆகியவை சீனாவில் இன்று இரவு 7:30 மணிக்கு CST ஆசியா (மாலை 5:00 மணி IST)-க்கு தொடங்கும். Vivo X30-சீரிஸின் அறிமுகத்திற்கு முன்னதாக, Vivo X30-யில் இருந்து பயனர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் Pro வேரியண்ட்டில் இப்போது வரை அதிகம் வெளிவரவில்லை.
Vivo X30 Pro, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Samsung Exynos 980 chipset மூலம் இயக்கப்படும். மேலும், Android 9 Pie-ல் இயங்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, டிஸ்பிளே 6.44-inch with 2400x1080 pixels screen resolution உடன் இருக்கும். மேலும் ,அதன் மேல் வலது மூலையில் hole punch இருக்கும்,.அங்கு முன் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். punch hole-ன் விட்டம் 2.98mm இருக்கும்.
வெய்போவில் ஒரு டிப்ஸ்டரின் பதிவின் படி, Vivo X30 Pro, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முதன்மை கேமராவுக்கு 32 மெகாபிக்சல் secondary shooter, 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் கேமரா உதவும். Electronic Image Stabilisation மற்றும் Optical Image Stabilisation போன்ற அம்சங்களும் இருக்கும் என்று கசிவு தெரிவிக்கிறது. Vivo X30 சீரிஸ் கேமராவில் 60x super zoom வரை ஆதரவு இருக்கும் என்று விவோ ஏற்கனவே அதிகாரப்பூர்வ டீஸரில் வெளிப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, இந்த போன் 4,350mAh பேட்டரியுடன் 33W வரை ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும். Vivo X30 Pro-வின் அம்சங்களில் dual 5G ஆதரவு மற்றும் NFC ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation