டிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro! விவரங்கள் உள்ளே....

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 டிசம்பர் 2019 11:40 IST
ஹைலைட்ஸ்
  • Vivo X30 சீரிஸ் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை பேக் செய்யும்
  • இது Exynos 980 5G SoC-யால் இயக்கப்படும்
  • விவோ, புதிய வரிசையை அறிவிக்க, சீனாவில் ஒரு நிகழ்வை நடத்துகிறது

Vivo X30 டீஸர்கள் போனின் பின்புறத்தைக் காட்டியுள்ளன

டிசம்பர் 16-ஆம் தேதி Vivo X30 சீரிஸ் அறிமுகமாகும் என்று நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. புதிய வரிசையை அறிவிக்க நிறுவனம் சீனாவில் ஒரு பத்திரிகை நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் விவோ இரண்டு 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது - Vivo X30 மற்றும் Vivo X30 Pro. Vivo X30, நிறுவனம் கடந்த மாதம் சாம்சங் உடனான கூட்டு நிகழ்வின் போது முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டது, இதில் தென் கொரிய தொழில்நுட்பம் Vivo X30 சீரிஸை Exynos 980 5G இயக்கும். 

வெய்போவில் X30 தொடருக்கான வெளியீட்டு தேதியை விவோ அறிவித்தது. இதுவரை நிறுவனத்தின் பல்வேறு அதிகாரப்பூர்வ டீஸர்களுக்கு நன்றி, Vivo X30 சீரிஸில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து எங்களுக்கு ஏற்கனவே சில யோசனைகள் உள்ளன. X30 சீரிஸ் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது, அதில் 60x zoom திறன் கொண்ட சூப்பர் ஜூம் கேமரா இருக்கும். நிறுவனம் telephoto shooter.-க்கு periscope ஸ்டைல் ​​கேமரா அமைப்பைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. கூடுதலாக, Vivo X30 சீரிஸ் Samsung Exynos 980 5G SoC-ஐ SA மற்றும் NSA 5G modes ஆகிய இரண்டிற்கும் ஆதரவுடன் பயன்படுத்தும்.

விவோ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்திற்கு ஒரு hole-punch  டிஸ்ப்ளே வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது என்பதையும், Coral, Black, and a mineral-coloured gradient finish ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் போனை வழங்குவதையும் நாங்கள் அறிவோம். திரை அளவு மற்றும் பிற விவரக்குறிப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

வதந்திகள் ஏதேனும் அறிகுறியாக இருந்தால், Vivo X30-யில் 90Hz refresh rate, 8GB RAM, 256GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உடன் 6.5inch AMOLED டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும். Pro மாடல், 90Hz refresh rate, 12GB RAM, 256GB ஸ்டோரேஜ் உடன் 6.89-inch AMOLED டிஸ்ப்ளேவை பேக் செய்யும். மேலும், 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. DSLR-க்கு டஃப் கொடுக்க Vivo ரெடி! Zeiss-உடன் கைகோத்து Vivo X300 சீரிஸ் இந்தியாவிற்கு வருது
  2. OnePlus-ன் கேமிங் ராட்சசன் வந்துட்டான்! 7,800mAh பேட்டரி பவர்! 165Hz டிஸ்ப்ளே! OnePlus Ace 6-ன் அம்சங்கள் என்னென்ன?
  3. ஒன்பிளஸ் 15 வந்துவிட்டது! பேட்டரி வேற லெவல்! 7300mAh பேட்டரி பவர் விலையும், ஸ்பெக்ஸ்ஸும் பார்க்கலாமா?
  4. கேமராவில் புரட்சி! 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் உடன் Xiaomi 17 Ultra வரப்போகுது
  5. அல்ட்ரா-ஸ்லிம் செக்மென்ட்டில் Motorola-வின் புதிய ஆட்டம்! Moto X70 Air இந்திய லான்ச் டீஸ் ஆகி இருக்கு! விலை ₹30,000-க்குள் இருக்குமா?
  6. சின்ன ஃபோன் பிரியர்களுக்கு Vivo-வின் சர்ப்ரைஸ்! Vivo S50 Pro Mini-இல் Dimensity 9400 சிப்செட்
  7. HMD-ன் அடுத்த மாடுலர் ஃபோன் ரெடி! கேமிங், வயர்லெஸ் சார்ஜிங் என ஒன்பது புது Smart Outfits! HMD Fusion 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
  8. Nothing ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! Nothing Phone 3a Lite இன்று மாலை அறிமுகம்! மலிவு விலையில் Glyph லைட் வருதா?
  9. iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!
  10. OnePlus ரசிகர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 15, Ace 6 விலை லீக்! ரூ. 53,100 ஆரம்ப விலையில் 7300mAh பேட்டரி போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.