Photo Credit: Weibo
Vivo X30 Pro கேமரா விவரக்குறிப்புகள் சீனாவில் ஒரு டிப்ஸ்டரால் கசிந்துள்ளன. Vivo X30 Pro-வின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்னரே சமீபத்திய கசிவு வருகிறது, இது Vivo X30 உடன் அறிமுகமாகும். ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு - 64-megapixel முதன்மை சென்சார் கொண்டதாகக் கூறப்படுகிறது. Vivo X30 Pro எலக்ட்ரானிக் பட உறுதிப்படுத்தல் (electronic image stabilisation EIS) மற்றும் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (optical image stabilisation OIS) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. X30 சீரிஸ் dual-mode 5G ஆதரவுடன் வரும் என்றும் 60x super zoom இருக்கும் என்றும் விவோ ஏற்கனவே கிண்டல் செய்தது.
Weibo அறிவிக்கப்படாத தகவல்களை கசிய வைக்கும் டிப்ஸ்டர், Vivo X30 Pro அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 64-megapixel முதன்மை சென்சார் கொண்டிருக்கும் என்று கூறுகிறார். ஸ்மார்ட்போனில் ultra-wide-angle lens உடன் 32-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8-megapixel சென்சார் மற்றும் telephoto lens உடன் 13-megapixel சென்சார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Vivo X30 Pro-வில் EIS மற்றும் OIS ஆதரவை வழங்குவதாக வதந்தி பரவியுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் ஏற்கனவே periscope-shaped கேமரா தொகுதிடன் 60x super zoom வரை ஆதரிக்க கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம், மாடல் எண் V1938T உடன் ஒரு விவோ போன் சீனாவின் 3C தரவுத்தளத்தில் வெளிவந்தது. இது Vivo X30 Pro 5G என்று நம்பப்படுகிறது. 3C பட்டியல் புதிய ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று பரிந்துரைத்தது.
இந்த வார தொடக்கத்தில் விவோ தனது அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கின் மூலம் தொடர்ச்சியான டீஸர் படங்களையும் வெளியிட்டது, இது குறிப்பாக X30-ஐ hole-punch டிஸ்பிளே வடிவமைப்புடன் காட்டியது. டீஸர் படங்கள் புதிய ஸ்மார்ட்போனின் சாய்வு பின்புறத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
வடிவமைப்பு வாரியாக, Vivo X30 மற்றும் X30 Pro போன்ற அம்சங்களின் பட்டியல் இருக்கக்கூடும். இதன் பொருள் இரு சாதனங்களிலும் hole-punch டிஸ்பிளேவை பாதுகாப்பாக எதிர்பார்க்கலாம்.
Vivo X30 சீரிஸ், SA மற்றும் NSA 5G முறைகளுக்கான ஆதரவுடன் Samsung Exynos 980 SoC-ஐ வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கைபேசிகள் 90Hz refresh rate-ஐயும்12GB RAM வரை இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. Vivo X30 Pro 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதாகவும், 4,500mAh பேட்டரி அடங்கும் என்றும் வதந்தி பரவியுள்ளது.
விவோ, டிசம்பர் 16 திங்கள் அன்று சீனாவில் X30 சீரிஸ் அறிமுகத்தை நடத்துகிறது. இதற்கிடையில், நிறுவனம் சில புதிய டீஸர்களை வெளியிட வாய்ப்புள்ளது. வதந்தி ஆலை அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக இன்னும் சில விவரங்களைக் கொண்டிருக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்