இந்த மாதம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ ஃபிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
இந்த மாதம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ ஃபிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சுதந்திர தின விற்பனை ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை விவோவின் பிரத்யேக ஈ-காமெர்ஸ் தளத்தில் நடக்கும். இதில் வாடிக்கையாளர்கள் சிறப்புத் தள்ளுபடி, கூப்பன் டீல்கள், கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவோ திறன்பேசிகள், பிற துணைக் கருவிகள் மீது பெறலாம். இவற்றுள் புதிதாக வெளிவந்துள்ள விவோ நெக்ஸ் விவோ V9 கைப்பேசிகளும் அடங்கும். இதைத் தவிரவும் பல்வேறு சலுகைகள் இந்த நாட்களில் தரப்படவுள்ளன.
இந்த விற்பனையின் சிறப்பு அம்சம் விவோ நெக்ஸ் மற்றும் விவோ V9 கைப்பேசிகள் ரூ.1947க்கும், USB கேபிள்கள், இயர் ஃபோன்கள் ரூ. 72ற்கும் விற்கப்படவுள்ளன. இந்த ஃப்ளாஷ் சேல் மூன்று நாட்களும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி ஸ்டாக் கையிருப்பு உள்ளவரைத் தொடரும். இந்த மூன்று நாட்களிலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாடல்களில் ரூ.4000 வரை கேஷ்பேக் பெறலாம். இதைத்தவிர்த்து, எல்லா விவோ திறன்பேசிகளுக்கும் பன்னிரண்டு மாதங்களுக்கான வட்டியில்லாத் தவணை முறையும் கொண்டுவரப்படவுள்ளது. ஒவ்வொரு விவோ நெக்ஸ், விவோ V9 மற்றும் விவோ X21 கைப்பேசிகளுடனும் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் இயர் ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு விற்பனையின்போது பல கூப்பன்களையும் வழங்கப்படவுள்ளன. USB கேபிள்கள் மற்றும் இயர் ஃபோன்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 50 மதிப்புள்ள கூப்பன்களும் உயர் ரக இயர் ஃபோன்களுடன் ரூ.200 மதிப்புள்ள கூப்பன்களும், விவோ V7 மற்றும் V7+ ஃபோன்களுடன் முறையே ரூ.2000 மற்றும் ரூ.3000த்திற்கான கூப்பன்களும் வழங்கப்படவுள்ளன. இக்கூப்பன்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட திறன்பேசிகள் மற்றும் உபரி பாகங்களை வாங்கலாம். இந்த விற்பனை ஆகஸ்ட் 6 நண்பகல் பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது.
இதைக்குறித்து விவோ இந்தியாவின் CMO ஜெரோமி சென், "விவோ அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களுடைய எழுபத்து இரண்டாவது சுதந்திர தினத்தை சிறப்பானதாக்க எண்ணியது. இந்த ஃபிரீடம் கார்னிவல் புத்தம் புதிய திறன்பேசிகளுக்கு பல சலுகைகள் மூலம் அனைத்து இந்தியர்களும் விவோ பொருட்களின் வழியாகத் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொள்ளவும் கொண்டாடவும் முடியும்" என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto