Vivo நிறுவனம் தனது புதிய Vivo V40 மற்றும் Vivo V40 Pro ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன்கள் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Vivo V40 ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை Zeiss வசதியுடன் கூடிய கேமராக்களை பெற்று இருக்கும் என தெரிகிறது.
6.78 அங்குல வளைந்த AMOLED டிஸ்பிளே இருக்கும்.120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4,500 nits பிரகாசத்தை கொண்டிருக்கும். Adreno 720 GPU உடன் இணைக்கப்பட்ட Snapdragon 7 Gen 3 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதனால் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். 12GB வரை LPDDR4X ரேம் மற்றும் 512GB வரை UFS 2.2 மெமரி வசதியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FuntouchOS 14 இதில் இருக்கிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியை கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரையில் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். கேமராவை பொறுத்தவரையில் Zeiss கேமரா சென்சார் வசதியைக் கொண்டுள்ளது. அதன்படி 50எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி முன்புற கேமராவும் இதில் உள்ளது.
இரட்டை சிம், 5G, Wi-Fi 6, புளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB Type-C இணைப்புகளை சப்போர்ட் செய்கிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68-மதிப்பிட்டை பெற்றுள்ளது. மொத்தமாக 190 கிராம் எடை கொண்டது. எளிதாக எடுத்துச்செல்ல முடியும். 50 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்