மார்ச் 3-ல் வெளியாகிறது Vivo V19 Pro...!

Vivo V19 Pro-வில் இரட்டை செல்பி கேமராக்கள் மற்றும் hole-punch டிஸ்பிளே வடிவமைப்பு இருக்கலாம்.

மார்ச் 3-ல் வெளியாகிறது Vivo V19 Pro...!

Vivo V19 Pro இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Vivo V19-க்கு முன்பே, Vivo V19 Pro இந்தியாவில் தொடங்கலாம்
  • விவோ, இந்த வார இறுதியில் முன் பதிவுகளை ஏற்கத் தொடங்கலாம்
  • Vivo V19 Pro இரட்டை செல்பி கேமராக்களைக் கொண்டுள்ளது
விளம்பரம்

Vivo V19 சீரிஸ் போன்கள் இப்போது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக வதந்தி அலையில் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், விவோ தனது V19 மற்றும் V19 Pro  ஸ்மார்ட்போன்களை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று செய்திகள் வந்தன. போன்களுக்கான முன் பதிவுகள் இந்த மாதத்திலேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விவோ தனது அடுத்த முதன்மை ஸ்மார்ட்போன்களைப் பற்றி இன்னும் அமைதியாக இருக்கும்போது, ​​சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மார்ச் முதல் வாரத்தில் Vivo V19 Pro-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரத்தில், போனின் முன் பதிவுகள் பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து தொடங்கப்படலாம். Vivo V19 Pro இந்தியா வெளியீடு, வதந்திகள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விவரக்குறிப்புகள் குறித்து மேலும் படிக்கவும்.

Vivo V19 Pro, மார்ச் 3-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, 91Mobiles-ன் அறிக்கை கூறுகிறது. Vivo V19 Pro-வுக்கான முன்பதிவு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் விவோ தனது V19 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு Vivo V19 Pro-வைக் கொண்டுவர எதிர்பார்க்கலாம்.

Vivo V19 Pro இரட்டை செல்ஃபி கேமராக்களுடன் hole-punch டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று வதந்தி பரவியுள்ளது. தெளிவுதிறன் அல்லது இந்த செல்பி கேமராக்களின் சரியான இடம் குறித்து எந்த வார்த்தையும் இல்லை. ஆனால், விவோ, Poco X2 அல்லது Samsung Galaxy S10+-க்கு இணையான அணுகுமுறையைப் பின்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகளைப் பொறுத்தவரை, விவோ தனது புதிய V19 சீரிஸ் போன்களை ரூ.20,000-30,000 விலை பிரிவில் அறிமுகப்படுத்தக்ககூடும். நிறுவனம் V19 Pro-வை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் அதன் சில்லறை நெட்வொர்க் வழியாக நாடு முழுவதும் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V15 மற்றும் V17 சீரிஸ்களைப் போலவே V19-க்கு முன்னதாக Vivo V19 Pro இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் முந்தைய அறிக்கை தெரிவித்தது.

விவோ கடந்த ஆண்டு இந்தியாவில் மிட் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் 28 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு முன்னிலை வகித்ததாக IDC தெரிவித்துள்ளது. மிட் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் 300-500 டாலர் விலையில் போன்கள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.


Is Poco X2 the new best phone under Rs. 20,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

                                                       

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. விவோ ரசிகர்களுக்கு ஒரு ஷாக் அப்டேட்! X300 Ultra-வில் கேமரா பட்டன் கிடையாதா? ஆனா டிஸ்ப்ளே சும்மா தெறிக்குது
  2. சாம்சங்-ல இருந்து ஒரு "கனெக்டிவிட்டி" புரட்சி! டவர் இல்லாத காட்டுல கூட இனி போன் பேசலாம். Galaxy S26-ல் வரப்போகும் அந்த மேஜிக் பீச்சர்
  3. ஜிம்முக்கு போகாமலே ஃபிட் ஆகணுமா? அமேசான்ல ஆஃபர் மழை! ₹45,000 ட்ரெட்மில் வெறும் ₹10,999-க்கு
  4. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய கேமரா அரக்கன்! 7000mAh பேட்டரி + ரெண்டு 200MP கேமரான்னு Oppo Find X9s மரண மாஸா வருது
  5. ஜனவரி 6-க்கு ரெடியா இருங்க! 7000mAh பேட்டரி + 200MP கேமரான்னு Realme 16 Pro+ மரண மாஸா வருது
  6. (Update) பட்ஜெட் போன் லிஸ்ட்ல டெக்னோ-வோட அடுத்த ஆட்டம் ஆரம்பம்! ? ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. Spark Go 3 & Pop 20 பத்தின கசிந்த தகவல்கள்
  7. சாம்சங் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்! S26 சீரிஸ் விலை தாறுமாறா ஏறப்போகுது. என்ன காரணம்? இதோ முழு விவரம்!
  8. உங்க சாம்சங் டேப்லெட்டுக்கு புது பவர் வருது! One UI 8.5 டெஸ்ட் பில்ட்ஸ் லீக் ஆகிடுச்சு! என்னென்ன மாஸ் பீச்சர்ஸ் இருக்கு?
  9. ஸ்பீக்கரா இல்ல ஷோ-பீஸா? வீட்டு டிசைனோட அப்படியே கலந்துடுற மாதிரி சாம்சங் கொண்டு வந்திருக்காங்க ‘Music Studio’ சீரிஸ்
  10. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய "பேட்டரி அரக்கன்"! ரியல்மி-ல இருந்து 10,001 mAh பேட்டரியோட ஒரு போன் வருது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »