Photo Credit: Twitter/ @Vivo_India
விவோ மொபைல்ஸ் இந்த மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவில் விவோ வி19-ஐ அறிமுகப்படுத்தின. விவோ வி19, நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி17-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகக் கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வி19, விவோ வி17-ல் உள்ளதைப் போலவே பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பையும், முன்புறத்தில் ஒற்றை ஹோல்-பஞ்சையும் கொண்டுள்ளது. விவோ வி19 வெளியீடு இந்தியாவிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது, நிறுவனம் இப்போது தனது ட்விட்டர் கணக்கில் டீஸர்களை வெளியிட்டுள்ளது. விவோ வி19-க்கான வெளியீட்டு தேதியை விவோ இதுவரை அறிவிக்கவில்லை, ஆனால் விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்கள் அறிமுகத்திற்கு முன்பே கசிந்துள்ளன.
Vivo தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனான விவோ வி19-ஐ கிண்டல் செய்ய Twitter-க்கு அழைத்துச் சென்றது. டீஸர் வி19-ன் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்போடு இரட்டை ஹோல்-பஞ்ச் செல்பி கேமராவும் தெளிவாகத் தெரியும்.
இந்தியாவுக்கு வரவிருக்கும் Vivo V19-ன் விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்கள் 91Mobiles-ஆல் தெரிவிக்கப்பட்டன. அறிக்கையின்படி, விவோ வி19, 6.44 இன்ச் முழு எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவை 20: 9 விகிதத்துடன் கொண்டிருக்கும். இந்தோனேசிய மாடலைப் போலல்லாமல், இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC-ஐக் கொண்டிருக்கும், இந்திய மாடல் 8 ஜிபி ரேம் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 SoC-ஆல் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. சாதனம் பியானோ பிளாக் மற்றும் மிஸ்டிக் சில்வர் கலர் வேஎரியண்டுகளில் கிடைக்கும் என்று கசிவுகள் தெரிவிக்கின்றன.
விவோ, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் வி19-க்கு வழங்க முனைகிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், டிஸ்பிளே, 32 மெகாபிக்சல் பிரதான செல்பி சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள்-கேமராவுக்கான இரட்டை ஹோல்-பஞ்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளது.
Vivo V17 போலவே விவோ வி19-ன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனருடன் வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10-க்கு மேல் FunTouchOS 10-ல் இயக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பேட்டரி 4,500mAh என்று கூறப்படுகிறது, மேலும் இது 33W விவோ ஃப்ளாஷ் சார்ஜ் 2.0-ஐ ஆதரிக்கும்.
அதே அறிக்கை, சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜின் அடிப்படை வேரியடிண்டின் விலை சுமார் ரூ.25,000 என்று கூறியது. அதிக வேரியண்டிற்கான விலை தற்போது தெரியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்