Photo Credit: டவிட்டர்/ இஷான் அகர்வால்
விவோ நிறுவனம் தனது பாப்-அப் செல்ஃபி வசிதிகொண்ட ஸ்மார்ட்போனான விவோ வி15 ப்ரோ மொபைல் போனை வரும் பிப்ரவரி 20-ல், அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் அறிமுக தேதிக்கு முன்னரே இணையத்தில், அதன் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, 2 நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் எனத் தெரிகிறது. கிரேடியன்ட் ப்ளூ மற்றும் கிரோடியன்ட் ரெட் ஆகிய நிறங்களிலேயே வி15 இருக்க வாய்ப்புள்ளது.
இதற்கு முன்னர் வந்த டீசரில் நீல நிறம் மட்டுமே காணப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய கிரேடியன்ட் ரெட் நிறம் அறிமுகமாகியுள்ளது.
இந்த போனில், 32 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், குவால்கம் ஸ்னாப்டிராகன் 675SoC பொருத்தப்பட்டிருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் இந்த போன் சந்தைக்கு வரும் எனத் தெரிகறது.
6.39 இஞ்ச் ஹெச்டி மற்றும் அமோலெட் அல்ட்ரா திரை, 3,700 mAh பவர் கொண்ட ‘டூயல் எஞ்ஜின்' மட்டும் பல தொழிநுட்பம் கொண்டிருக்கும் இந்த அட்டகாசமான போன். இந்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைவிரல் ரேகை பதிவு செய்யும் வசதியுடன் வெளியாகப் போவதாக நிறுவனம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் வி15 வெளியாக உள்ள நிலையில், அதன் விலை 33,000 ரூபாய் இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் லீக் ஆகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்