கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி11 போனுக்கு பிறகு, இம்முறை விவோ வி15 அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேதிகளை மறக்காமல் அறிமுக விழாவிற்கு வருமாரு கேட்டுகொண்ட அழைப்பிதழ்!
இந்தியாவின் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விவோ நிறுவனம் புதிதாக பாப் ஆப் செல்ஃபி போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விவோ இப்புதிய போன் அறிமுக விழாவை வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி நடத்த முடிவெடுத்துள்ளது.
கொடுக்கப்பட்ட அழைப்பில் போனின் மாடல் குறித்து எந்த விபரமும் குறிப்பிடப்படாத நிலையில் ‘பாப் ஆப் செல்ஃபி கேமரா' என மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரிதும் கிசுகிசுக்கப்பட்ட விவோ வி15 ப்ரோ மாடலாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்க்கின்ற நிலையில், கடந்த ஆண்டு வெளியான வி11 ப்ரோ ( விலை ரூ.23,192) ஆக கூட இருக்கலாம். நிழல் போன்ற உருவம் மட்டும் அழைப்பிதழில் காணப்பட்ட நிலையில் ‘ ஊரில் புதிய பாப் ஸ்டார் உதையமாகுகிறார்' என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது.
விவோ நெக்ஸ் என்னும் பாப் ஆப் செல்ஃபி கேமரா கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ. 44,990 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் விலை 39,990 ரூபாயாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் நெக்ஸ் போன்ற பிரிமியம் ரக போன்களை இந்தியாவில் தற்போது அறிமுகம் படுத்தாமல், பட்ஜெட் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதனால் இந்த மாடல் விவோ வி15 ப்ரோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியாகிவுள்ள படத்தை வைத்து அதில் மூன்று பின்புற கேமராக்களும், ஓரு பாப் ஆப் செல்ஃபி கேமராவும், இன் டிஸ்பிளே கைவிரல் ரேகை பதிக்கும் சென்சாரும் இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இது என்ன மாடல் என்பதை நாம் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed