5,000mAh பேட்டரி, டிரிபிள் ரியர் கேமராவுடன் வெளியானது Vivo U20!

5,000mAh பேட்டரி, டிரிபிள் ரியர் கேமராவுடன் வெளியானது Vivo U20!

Vivo U20, Racing Black மற்றும் Blaze Blue ஆகிய வண்ணங்களில் வாங்கலாம்

ஹைலைட்ஸ்
  • Vivo U20, octa-core Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது
  • 18W Dual-Engine சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது
  • 120-degree FOV உடன் 8-megapixel wide-angle லென்ஸைக் கொண்டுள்ளது
விளம்பரம்

Vivo U10-ன் தொடர்ச்சியாக Vivo U20 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய விவோ போன் 16-megapixel main snapper-ஐ உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 16-megapixel கேமராவை வழங்குகிறது. Vivo U20, octa-core Qualcomm Snapdragon  675 SoC-யால் இயக்கப்படுகிறது. இது தனியுரிம 18W Dual-Engine வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.


இந்தியாவில் Vivo U20-யின் விலை:

இந்தியாவில் Vivo U20 (First Impressions) 4GB + 64GB வேரியண்டிற்கு 10,990 ரூபாயும், 6GB + 64GB மாடல் 11,990 ரூபாயாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. விவோவின் சமீபத்திய போன் Racing Black மற்றும் Blaze Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த போன் இந்தியாவில் நவம்பர் 28-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். Amazon.in மற்றும் அதிகாரப்பூர்வ Vivo e-shop வழியாக கிடைக்கும். Vivo U20-யின் அறிமுக சலுகைகளில் prepaid purchase-க்கு ரூ. 1,000 தள்ளுபடியும், ஆறு மாதங்கள் வரை no-cost EMI ஆகியவை அடங்கும்.


Vivo U20-யின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் Vivo U20, Funtouch OS 9 தனிபயன் தோலுடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 90.3 percent screen-to-body ratio மற்றும் peak brightness of 480 nits உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

Vivo U20 First Impressions

போனுக்கான Widevine L1 சான்றிதழைப் பெற்றுள்ளதாக விவோ கூறுகிறது. அதாவது பயனர்கள் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளிலிருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட உள்ளடக்கத்தை அனுபவிக்க முடியும். Vivo U20, 6GB RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 675 SoC-யிலிருந்து சக்தியை ஈர்க்கிறது.

vivo u20 back gadgets 360 Vivo U20

Vivo U20, Racing Black மற்றும் Blaze Blue வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது

தொலைபேசியின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இது Sony IMX499 சென்சார் மற்றும் f/1.8 aperture உடன் 16-megapixel பிரதான கேமராவால் சிறப்பிக்கப்படுகிறது. இது f/2.2 aperture மற்றும் 120-degree field of view உடன் 8-megapixel wide-angle சென்சார், 4 செ.மீ தூரத்தில் ஸ்டில்களைப் பிடிக்க f/2.4 aperture உடன் 2-megapixel macro கேமரா ஆகியவை உள்ளது. செல்ஃபிக்களுக்காக, முன்பக்கத்தில் f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா உள்ளது.

Vivo U20, 64GB UFS 2.1 ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும், microSD card slot வழியாக (256GB வரை) விரிவாக்க முடியும். Vivo U20-யின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS மற்றும் Galileo ஆகியவை அடங்கும். Vivo U20-யின் சென்சார்களில் accelerometer, ambient light sensor, proximity sensor, magnetometer, gyroscope மற்றும் அங்கீகாரத்திற்காக rear-mounted fingerprint சென்சார் ஆகிய சென்சார்களை பேக் செய்கிறது.

Vivo U10 தொடர் தனியுரிம Dual-Engine ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Vivo U20-யின் சில்லரை பேக்கேஜில் 18W சார்ஜரை விவோ தொகுக்கிறது. Vivo U20 போன் 162.15 x 76.47 x 8.89mm அளவீட்டையும் 193 கிராம் எடையையும் கொண்டதாகும். Vivo U20 பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் அதன் பிரதான பின்புற கேமராவில் 1080p வீடியோக்களை 60fps வரை பதிவு செய்ய முடியும், அதே நேரத்தில் 4K வீடியோ பிடிப்பு அதிகபட்சம் 30fps ஆக இருக்கும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Full-HD+ display
  • Decent battery life
  • Good performance
  • Bad
  • Micro-USB port
  • Below-average camera performance
  • Bloatware preinstalled
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo U20, Vivo U20 Price in India, Vivo U20 Specifications, Vivo
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »