Vivo U20 இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த தொலைபேசி அறிமுகம் வரை தீவிரமாக இயங்குகிறது. தொலைபேசியின் முக்கிய விவரக்குறிப்புகள் நிறுவனத்தால் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், அதன் வடிவமைப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Vivo U20 waterdrop-style notch-ம், பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இது blue gradient back panel finish மற்றும் பின்புற கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Vivo U20 இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo U10-ன் தொடர்ச்சியாகும்.
Vivo U20 வெளியீட்டு விவரங்கள், இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை:
இந்தியாவில் Vivo U20 வெளியீடு இன்று மதியம் 12 மணிக்கு நிர்ணயிக்கப்படுள்ளது. அமேசான் இந்தியா டீஸர் பக்கம் இன்று விலை விவரங்கள் வெளியிடப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது. தொலைபேசியின் விலை அதே வரம்பில் இருக்க வேண்டும் அல்லது முன்னோடி Vivo U10-ஐ விட சற்று அதிகமாக இருக்க வேண்டும். நினைவுகூர, இந்தியாவில் Vivo U10-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 8,990 ரூபாய். 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 9,990-யாகவும், top-of-the-line 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு உள்ளமைவு ரூ. 10.990-யாவும் விலையிடப்படுள்ளது. இந்த தொலைபேசி அமேசான் இந்தியா மற்றும் விவோ இ-ஸ்டோர் ஆகிய இரண்டிலும் விற்பனைக்கு வரும். மேலும் இரு தளங்களும் ஆர்வமுள்ள பதிவுகளையும் எடுத்து வருகின்றன. விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்று நண்பகலில் அறிவிக்கப்படும்.
Vivo U20-யின் விவரக்குறிப்புகள்:
டீஸர்களைப் பொறுத்தவரை, Vivo U20, waterdrop-style notch, 90.3 percent screen-to-body ratio மற்றும் Widevine L1 சான்றிதழ் ஆகியவற்றுடன் 6.53 full-HD+ FullView டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் 6GB RAM மற்றும் UFS 2.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்ய இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. Vivo U20 காத்திருப்புடன் 273 மணிநேரமும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் 21 மணிநேரமும், பேஸ்புக் பயன்பாட்டில் 17 மணிநேரமும், யூடியூப் பயன்பாட்டில் 11 மணிநேரமும் நீடிக்கும் என்றும் பக்கம் கூறுகிறது.
Vivo U3-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக Vivo U20 நம்பப்படுகிறது. இது கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. இது தொடர்பாக விவோ இன்னும் எதுவும் கூறவில்லை என்றாலும், விவோ சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளை அறிமுகப்படுத்தியது இது முதல் தடவை அல்ல. மேலும், நிறுவனம் இதுவரை கிண்டல் செய்த அனைத்து Vivo U20 விவரக்குறிப்புகளும் Vivo U3 விவரக்குறிப்புகளுடன் சரியாக பொருந்துகின்றன. இந்த யூகம் உண்மையாகிவிட்டால், தொலைபேசியின் மூன்று பின்புற கேமரா அமைப்பில், f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle snapper மற்றும் 2-megapixel depth சென்சாருடன் இணைக்கப்பட்டு, f/1.78 aperture உடன் 16-megapixel பிரதான கேமராவைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்