நவம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மற்றொரு சுற்று ஃபிளாஷ் விற்பனையில், Vivo U20 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரியை தவிர, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் Snapdragon 675 SoC ஆகியவை அடங்கும். அதன் விலை புள்ளியில், Vivo U20 Redmi Note 8 மற்றும் Realme 5s-க்கு போட்டியாகும்.
இந்தியாவில் Vivo U20 -யின் 4GB + 64GB வேரியண்டி விலை ரூ. 10,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் போனின் 6GB + 64GB மாடல் ரூ. 11,990 விலைக் குறியீட்டுடன் வழங்குகிறது. Vivo U20-யின் விற்பனை Amazon India மற்றும் Vivo India site வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
Vivo U20 vs Redmi Note 8 Compared: Price, Performance, Cameras, and More
அமேசான் இந்தியாவில், Vivo U20 சலுகைகளில் HDFC கேஷ்பேக் கார்டு பயனர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் மற்றும் no-cost EMI ஆகிய சலுகைகள் அடங்கும். ரூ. 6,000 மதிப்புள்ள ஜியோ பலன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.
Vivo U20-யின் விவரக்குறிப்புகளில் (Review) 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளே; Qualcomm Snapdragon 675 SoC; 6GB RAM; டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் (16-megapixel + 8-megapixel + 2-megapixel); 16-megapixel முன்புற கேமரா; மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அதரவுடன் 5,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
Vivo U20 vs Redmi Note 8 vs Realme 5s: Price in India, Specifications Compared
ஸ்மார்ட்போனில் நிலையான இணைப்பு விருப்பங்கள் உள்ளன, இருப்பினும் விவோ USB Type-C-க்கு பதிலாக Micro-USB port உடன் வருகிறது. Vivo U20 162.15x76.47x8.89mm அளவீட்டையும், 193 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்