நிறுவனம் விரைவில் Vivo U20-யின் 8 ஜிபி ரேம் வேரியண்டை அறிமுகப்படுத்தவுள்ளது என்று, விவோ சமீபத்தில் கேஜெட்ஸ் 360-க்கு உறுதிப்படுத்தியது. இன்று, Vivo U20-யின் 8 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது. இப்போது அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகள் வழியாக சில சலுகைகளுடன் வாங்கலாம்.
Vivo U20's-ன் புதிய 8GB + 128GB வேரியண்ட் ரூ. 17,990-யாக விலையிடப்படுள்ளது. மேலும், நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளில் இருந்து கிடைக்கும். Vivo U20-யின் புதிய 8GB RAM வேரியண்டில் HDFC வங்கி கிரெடிட் கார்டுடன் 5 சதவிகித கேஷ்பேக், ICICI வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுடன் 5 சதவிகித கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுடன் 5 சதவிகித கேஷ்பேக்கை டிசம்பர் 31 வரை விவோ வழங்குகிறது.
ரூ. 6,000 மதிப்புள்ள ஜியோ பலன்கள் மற்றும் Bajaj, IDFC முதல் வங்கி, HDB மற்றும் ஹோம் கிரெடிட் ஆகியவற்றிலிருந்து EMI சலுகைகள் ஆகியவையும் உள்ளன. Vivo U20, Racing Black மற்றும் Blaze Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. Vivo U20-யின் லோயர்-எண்ட் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 11,990-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதே சமயம் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 10,990-யாக விலையிடப்பட்டுள்ளது.
டூயல்-சிம் (நானோ) Vivo U20, Funtouch OS 9 உடன் Android Pie-யால் இயங்குகிறது. வன்பொருளைப்பற்றி பேசுகையில், 90.3 percent screen-to-body ratio மற்றும் peak brightness of 480 nits உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளேவை விவோ வழங்குகிறது.Vivo U20, 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது.
Vivo U20-யின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 16-megapixel பிரதான ஸ்னாப்பர் உள்ளது. இது Sony IMX499 சென்சாரைப் பயன்படுத்துகிறது மற்றும் f/1.8 aperture-ஐக் கொண்டுள்ளது. இது f/2.2 aperture மற்றும் 120-degree field of view உடன் 8-megapixel wide-angle கேமரா உதவுகிறது. மேலும்,f/2.4 aperture 2-megapixel macro shooter-ஐக் கொண்டது. முன்பக்கத்தில், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைக் கையாளும் வகையில் f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா உள்ளது.
Vivo U20, microSD card slot வழியாக (256 ஜிபி வரை) மேலும் விரிவாக்கக்கூடிய 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. Vivo U20-யின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS மற்றும் Galileo ஆகியவை அடங்கும். Vivo U20-யின் சென்சார்களில் accelerometer, ambient light sensor, proximity sensor, magnetometer, gyroscope மற்றும் அங்கிகாரத்திற்காக rear-mounted fingerprint சென்ச்சார் ஆகியவை அடங்கும். Vivo U20-யானது Dual-Engineஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்