விவோ U1 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ள நிலையில் அந்த போனின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் சென்சார் பொருத்தப்பட்ட நிலையில் முன்புறத்தில் வாட்டர் டிராப் வடிவத்தில் இருக்கும் நாட்ச் உள்ளது.
மேலும் 6.2 இஞ்ச் திரை உள்ளதாகவும், ஸ்னாப்டிராகன் 439SoC மற்றும் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.இந்த போனின் சிறப்பு அம்சமாக 4,030mAh பேட்டரி இருக்கும் என தகவல் வந்துள்ளது.
தனது துணை நிறுவனமான ஐகியூ பிராண்ட் தனது முதல் போனை சீன சந்தையில் விற்பனை செய்ய தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பு கொண்ட விலைப்பட்டியலை பொருத்தவரை விவோ யு1 (3ஜிபி ரேம்+32 ஜிபி சேமிப்பு வசதி) ரூபாய் 8,400 க்கும், (3ஜிபி ரேம்+64ஜிபி ரேம்) வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூபாய் 10,500 க்கும், (4ஜிபி ரேம்+64ஜிபி ரேம்) ரூபாய் 12,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
‘ஸ்டாரி பிளாக்', ஊதா மற்றும் ‘அரோரோ ரெட்' போன்ற நிறங்களில் வெளியாகபோவது குறிப்பிடத்தக்கது.
ஃபன்டச் OS 4.5 என்னும் மென்பொருள் கொண்டு இயங்கும் இந்த விவோ யூ1 ஸ்மார்ட்போன் ஆண்டிராய்டு 8.1 அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேமராவை பொருத்தவரை பின்புறத்தில் இரண்டு கேமராக்களும் முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் இந்த போனுடன் முகத்தை வைத்து போனை திறக்கும் வசதியை இது பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்