Vivo T3 Pro 5G இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது
Photo Credit: Vivo
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo T3 Pro 5G செல்போன் பற்றி தான்.
Vivo T3 Pro 5G இந்தியாவில் செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் 12ஜிபி வரை ரேம் வரை கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 6.77-இன்ச் 3D வளைந்த AMOLED டிஸ்பிளே இருக்கிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4,500nits உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. Vivo T3 5G , Vivo T3 Lite 5G மற்றும் Vivo T3x 5G ஆகியவை உள்ளடங்கிய சீரியஸ்சில் இப்போது Vivo T3 5G இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Vivo T3 Pro 5G 8GB ரேம் + 128GB மெமரி மாடல் இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ24,999க்கு கிடைக்கிறது.
8GBரேம்+256GB மெமரி மாடல் விலை ரூ. 26,999 விலையில் கிடைக்கிறது.
Flipkart மற்றும் Vivo India இணையதளம் வழியாக செப்டம்பர் 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாட்டில் விற்பனைக்கு வருகிறது.
எமரால்டு கிரீன் மற்றும் சாண்ட்ஸ்டோன் ஆரஞ்சு என இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த போன் வழங்கப்படுகிறது.
Vivo T3 Pro 5G ஆனது 6.77-இன்ச் முழு-HD+ 3D வளைந்த AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4,500nits உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி வரை எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 256ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.2 மெமரியை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 உடன் வந்துள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் Vivo T3 Pro 5G ஆனது இரட்டை பின்புற கேமரா யூனிட் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் Sony IMX882 முதன்மை சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா இருக்கிறது. செல்ஃபி, வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.
Vivo 80W வயர்டு ஃபாஸ்ட் சப்போர்ட் இருக்கிறது. Vivo T3 Pro 5G செல்போனில் 5,500mAh பேட்டரி இருக்கிறது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகிய வசதிகள் உள்ளது. செல்போன் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் கைரேகை சென்சார் உடன் வருகிறது. Vivo T3 Pro 5G செல்போன் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. சாண்ட்ஸ்டோன் ஆரஞ்சு மாடல் 190 கிராம் எடையும், எமரால்டு கிரீன் மாடல் 184 கிராம் எடையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India