ஜனவரி மாதம் வெளியான Vivo S1 Pro இந்தியா வேரியண்ட் இப்போது நாட்டில் விலைக் குறைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது மற்றும் இப்போது ரூ.18,990-க்கு கிடைக்கிறது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Vivo S1 Pro-வின் விலை ரூ.20,990-யில் இருந்து ரூ.18,990-யாக குறைக்கப்பட்ட விலையில் வாங்கலாம். இந்த திருத்தம் கேஜெட்ஸ் 360-க்கு ஒரு புகைப்படத்துடன் நிறுவனம் உறுதி செய்தது. இந்த விலைக் குறைப்பை முதன்முதலில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் வழங்கினார். நினைவுகூர, Vivo S1 Pro இந்தியா வேரியண்ட் இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, ஸ்மார்ட்போனின் விலை ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் வேறுபடுகிறது. உதாரணமாக அமேசானில், Vivo S1 Pro (Review) no-cost EMI/கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் ரூ.19,990-க்கு கிடைக்கிறது, சில விற்பனையாளர்கள் அதை குறைவாக பட்டியலிட்டுள்ளனர். மேலும், பிளிப்கார்ட்டில், இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு சலுகைகளுடன் ரூ.19,890-க்கு கிடைக்கிறது.
டூயல்-சிம் (நானோ) Vivo S1 Pro 6.38 இன்ச் முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவுடன் வந்தது. இது Funtouch OS 9.2 உடன் Android 9-ல் இயங்கியது. ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
Vivo S1 Pro குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது f/1.8 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் f/2.2 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் மேக்ரோ மற்றும் பொக்கே காட்சிகளைக் எடுக்க f/2.4 லென்ஸ்கள் கொண்ட இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களும் உள்ளன.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் 18W டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வந்தது,. Vivo S1 Pro-வில் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்