நான்காயிரம் வரை இந்தியாவில் விவோ போன்களுக்கான டீலர் விலை குறைக்கப்பட்டுள்ளது. Vivo V9, Vivo Y83, Vivo X21 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைக்கப்பட்டதாக வெளியான செய்தியை வீவோ இந்தியா நிறுவனம் என்டிடிவியிடம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விலைக்குறைப்பு வரும் திங்கள் (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வரும். August 27. இதன்படி விவோ வி9 இன் புதிய டீலர் விலை 18,990 ரூபாய் எனவும், விவோ ஒய்83 இன் புதிய விலை 13,990 ரூபாய் எனவும், விவோ எக்ஸ்21 இன் விலை 31,990 ரூபாய் எனவும் ஆகியுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் அறிமுகமானபோது Vivo V9 இன் விலை 22,990 ரூபாயாக இருந்தது. ஜூலையில் இதன் விலை முதன்முறையாகக் குறைக்கப்பட்டு 20,990 ரூபாய் ஆனது. தற்போது இது மேலும் குறைக்கப்பட்டு18,990 ரூபாய் என்றாகியுள்ளது. இதன் மூலம் இத்திறன்பேசி Honor Play, Nokia 6.1 Plus ஆகியவற்றின் போட்டியாளராகத் தற்போது மாறியுள்ளது. Champagne Gold, Pearl Black, Sapphire Blue ஆகிய மூன்று நிறங்களில் 4GB RAM/ 64GB உடன் Vivo V9 கிடைக்கும்.
Vivo Y83 ஜூலை மாதம் 14,990 ரூபாய்க்கு அறிமுகமானது. கருப்பு, தங்க நிறங்களில் 4GB RAM/ 32GB ஆகியவற்றுடன் இது கிடைக்கிறது. திரையிலேயே கைரேகை உணரியைக் (in-display fingerprint sensor) கொண்ட முதல் இந்திய ஸ்மார்ட்போனான Vivo X21 35,990 ரூபாய்க்கு அறிமுகமானது.
இவற்றின் விலைக்குறைப்பு இன்னும் ஃப்ளிப்கார்ட், விவோ இ-ஸ்டோர் ஆகிய ஆன்லைன் தளங்களில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இதனிடையே சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் Vivo V11 Pro ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 6 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான தூண்டி விளம்பரங்களில் வாட்டர்டிராப் டிஸ்பிளே நாட்ச், Halo முழுத்திரை, இரட்டை கேமரா, திரையுள் கைரேகை உணரி ஆகிய அம்சங்கள் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்