Galaxy Unpacked 2025 நிகழ்வில் Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் அறிமுகமானது
Photo Credit: Samsung
சாம்சங் போன்கள் அவற்றின் முன்னோடிகளைப் போலவே வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது (மேலே உள்ள படம்)
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy A56, Galaxy A36 மற்றும் Galaxy A26 செல்போன்கள் பற்றி தான்
Galaxy Unpacked 2025 நிகழ்வில் Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் அறிமுகமானது. இதனை தொடர்ந்து சாம்சங் விரைவில் மேலும் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy A56, Galaxy A36 மற்றும் Galaxy A26 மாடல்கள் இப்போது ஒரு சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டன. இது உலகளவில் அவர்களின் உடனடி அறிமுகத்தைக் குறிக்கிறது. இந்த பட்டியல் மூன்று மாடல்களின் சார்ஜிங் திறன்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. Galaxy A56 மற்றும் Galaxy A36 ஆகியவை சாம்சங் நிறுவனத்தின் முதன்மையான S-சீரிஸ் போன்களின் அதே வேகமான வயர்டு சார்ஜிங் திறனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gizmochina அறிக்கையின்படி , மூன்று ஃபோன்களும் TUV Rheinland இணையதளத்தில் வெளிவந்துள்ளன - இது உலகளாவிய சோதனை, ஆய்வு மற்றும் தயாரிப்புகளின் சான்றிதழுக்கான கொலோன் சார்ந்த அமைப்பாகும். Galaxy A56 மற்றும் Galaxy A36 ஆகியவை 45W வேகமான சார்ஜிங்கிற்கான சப்போர்ட் கொண்டிருக்கும் என்பது தெரிய வருகிறது. இதற்கிடையில் Galaxy A26 25Wல் சற்று மெதுவான சார்ஜிங்கை கொண்டிருக்கும்.
Samsung Galaxy A56 ஆனது US Federal Communications Commission (FCC) இணையதளத்தில் SM-A566E/DS என்ற மாடல் எண்ணைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது புளூடூத் 5.3, வைஃபை 6, என்எப்சி மற்றும் ஜிஎன்எஸ்எஸ் ஆதரவுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று பட்டியல் காட்டுகிறது.
10V திறனில் 4.5Aல் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் என கூறப்பட்டாலும் இது FCC தரவுத்தளத்தில் Samsung EP-TA800 அடாப்டருடன் தோன்றுகிறது, இது 25W வயர்டு சார்ஜிங்கிற்காக மதிப்பிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் மாதம் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Newly Found ‘Super-Earth’ GJ 251 c Could Be One of the Most Promising Worlds for Alien Life
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days
Flattened Dark Matter May Explain Mysterious Gamma-Ray Glow at Milky Way’s Core, Study Finds
NASA Telescopes Capture First-Ever Companion Star Orbiting Massive Red Supergiant Betelgeuse