கலக்கலான அம்சங்களுடன் வெளியான TikTok நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
கலக்கலான அம்சங்களுடன் வெளியான TikTok நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்!

Smartisan Jianguo Pro 3 இப்போது சீனாவில் விற்பனைக்கு வருகிறது

ஹைலைட்ஸ்
 • இந்த போன் 6.39-inch Full-HD+ AMOLED டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது
 • Sony IMX586 சென்சாருடன் 48-megapixel பிரதான கேமராவை பேக் செய்கிறது
 • இந்த போன் 18W சார்ஜின் ஆதரவுடன் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது

TikTok உரிமையாளர் ByteDance இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது ஸ்மார்ட்போனில் பணிபுரிவார் என்று கூறப்பட்டது. ByteDance-ன் முயற்சிகளின் உச்சம் இப்போது Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 (மொழிபெயர்க்கப்பட்ட) வடிவத்தில் அதிகாரப்பூர்வமாக சென்றுள்ளது. இது Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுவதோடு, நான்கு ரியர் கேமராக்களுடன் கூடிய முதன்மை தொலைபேசியாகும். இந்த போன் செல்ஃபி லைட்டிங் போன்ற மென்பொருள் அம்சங்களை வழங்குகிறது. மேலும், பயனர்கள் TikTok செயலியை lock screen-ல் ஒற்றை ஸ்வைப் மூலம் நேரடியாக அணுக அனுமதிக்கிறது.


Smartisan Jianguo Pro 3-யின் விலை:

சீனாவில், Smartisan Jianguo Pro 3 aka Nut Pro 3 மூன்று உள்ளமைவுகள் மற்றும் கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8GB + 128GB ஸ்டோரேஜின் விலை சீனாவில் CNY 2,899 (சுமார் ரூ. 29,000) -யாக விலையிடப்பட்டுள்ளது. அதேபோல் 8GB + 256GB பதிப்பு CNY 3,199 (சுமார் ரூ. 32,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு வகைகளும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். 12GB + 256GB ஸ்டோரேஜ் மாறுபாடும் உள்ளது. இது green-ish Matsutake நிறத்தில் மட்டுமே வருகிறது. அதன் வீட்டு சந்தையில் CNY 3,599 (சுமார் ரூ. 36,000) விலையைக் கொண்டுள்ளது.

Smartisan Jianguo Pro 3 இப்போது சீனாவில் கிடைக்கிறது. தொலைபேசியின் அனைத்து வகைகளிலும் CNY 200 (சுமார் ரூ. 2,000) தள்ளுபடியை முதல் விற்பனையில் வழங்குகிறது. இருப்பினும், சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் தொலைப்பேசி கிடைப்பதில் எந்த தகவலும் இல்லை.


Smartisan Jianguo Pro 3-யின் விவரக்குறிப்புகள்:
  
டூயல்-சிம் (நானோ) Smartisan Jianguo Pro 3, Smartisan OS 7-ஆல் இயங்குகிறது. ஆனால், அதை அடிப்படையாகக் கொண்ட ஆண்ராய்டின் பதிப்பு தெளிவாக இல்லை. இந்த போன் 403ppi pixel density மற்றும் 100,000:1 contrast ratio உடன் 6.39-inch Full-HD+ (1080 x 2340 pixels) AMOLED டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. 12GB RAM வரை இணைக்கப்பட்டு, Snapdragon 855+ processor-ஆல் சக்தியை ஈர்க்கிறது. 128GB ஸ்டோரேஜ் மாறுபாடு UFS 2.1 தரத்தை ஆதரிக்கிறது. அதே போல், 256GB ஸ்டோரேஜ் மாறுபாடு வேகமான UFS 3.0 தரத்தை ஆதரிக்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை, Smartisan Jianguo Pro, quad rear கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Sony IMX586 சென்சார் மற்றும் f/1.75 aperture உடன் 48-megapixel main snapper-ஆல் சிறப்பிக்கப்படுகிறது. மேலும், 123-degrees field of view உடன் 13-megapixel wide-angle கேமரா, 2x optical zoom ஆதரவுடன் 8-megapixel telephoto lens மற்றும் 5-megapixel macro கேமரா 2cm-க்கு அருகில் ஒரு பொருளின் காட்சிகளை எடுக்க முடியும். முன்புறத்தில் 20-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. இது பிரகாசமான புகைப்படங்களை வழங்க 4-in-1 pixel binning தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

Smartisan Jianguo Pro 3-யின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth v5.0, Wi-Fi a/b/g/n/ac, GPS, GLONASS, Galileo மற்றும் Wi-Fi Direct ஆகியவை அடங்கும். ByteDance-ன் அணியின் முதல் தொலைபேசியில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. Quick Charge 4+ (18W) fast சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் PD 3.0 ஆகியவற்றுடன் ஆதரிக்கப்படுகிறது. USB Type-C charger வசதி செய்யப்படுள்ளது. Smartisan Jianguo Pro 3-யின் பரிமாணங்களில் 156.6 x 74.38 x 7.8mm அளவீடையும், 185 கிராம் எடையையும் கொண்டதாகும்.

Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2340 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
 2. வரும் 6 ஆம் தேதி Flipkart Big Saving Days Sale ஆரம்பம்! சலுகை விவரங்கள் இதோ!!
 3. Amazon Prime Day Sale: ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள்!
 4. Google Pixel 4a ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 5. ரியில்மயின் 10W வயர்லெஸ் சார்ஜர் விற்பனை தொடக்கம்... விலை ரூ.899 மட்டுமே!
 6. ஜிபிஎஸ், ஹார்ட்-ரேட் சென்சாருடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை வெறும் ரூ.3,999தான்!
 7. ரியல்மி பட்ஸ் 3 இம்மாதம் அறிமுகம்... கூடவே ரியல்மி லேப்டாப் அறிமுகமா?
 8. வாட்ஸ்அப்பில் புதிதாக 138 எமோஜிகள் அறிமுகமாகின்றன!
 9. BSNL நெட்வொர்க்கில் 10 ஜிபி டேட்டாவுடன் ரூ.147 பிளான் அறிமுகம்!
 10. 3 மாதத்தில் 99 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாக பெற்ற ஜியோ நிறுவனம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com