10 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளோ பவரான செல்போனா?

Tecno Pop 9 5G என்ற குறைந்த விலையில் சக்திவாய்ந்த மொபைலை வழங்கியுள்ளது Tecno நிறுவனம்

10 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளோ பவரான செல்போனா?

Photo Credit: Tecno

Tecno Pop 9 5G comes in Aurora Cloud, Azure Sky and Midnight Shadow shades

ஹைலைட்ஸ்
  • 48 மெகாபிக்சல் AI பின்புற கேமராவுடன் வருகிறது
  • MediaTek Dimensity 6300 சிப்செட் இருக்கிறது
  • 8GB வரையிலான ரேம் இதில் இருக்கிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பதுTecno Pop 9 5G செல்போன் பற்றி தான்.


Tecno Pop 9 5G என்ற குறைந்த விலையில் சக்திவாய்ந்த மொபைலை வழங்கியுள்ளது Tecno நிறுவனம். 48 மெகாபிக்சல் AI பின்புற கேமராவுடன் வருகிறது. MediaTek Dimensity 6300 சிப்செட் இருக்கிறது. 8GB வரையிலான ரேம் இதில் இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அக்டோபர் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் Tecno Pop 9 5G விலை


இந்தியாவில் Tecno Pop 9 5G ஆரம்ப விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி ரூ.9,499 என்கிற விலைக்கு ஆரம்பம் ஆகிறது. 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 9,999] என்கிற விலைக்கு கிடைக்கும். இப்போது அமேசான் வழியாக முன்பதிவுக்கு கிடைக்கிறது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் 499 ரூபாய் டோக்கன் தொகை செலுத்தி இந்த செல்போனை முன்பதிவு செய்யலாம். செல்போன் வாங்கும் நேரத்தில் இந்த தொகை Amazon Pay இருப்புத் தொகையாக மீண்டும் வரவு வைக்கப்படும். Tecno Pop 9 5G ஆனது அரோரா கிளவுட், அஸூர் ஸ்கை மற்றும் மிட்நைட் ஷேடோ ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.


Tecno Pop 9 5G அம்சங்கள்


Tecno Pop 9 5G டூயல் சிம் (நானோ+நானோ) சப்போர்ட் செய்யும். 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயங்குகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான மெமரியை கொண்டுள்ளது.


கேமராவை பொறுத்தவரையில் எல்இடி ப்ளாஷ் உடன் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்582 பின்புற கேமராவை கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைபேசியில் Dolby Atmos உடன் இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன. வலது பக்கத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி, Tecno Pop 9 5G உடன் பெட்டியில் இரண்டு ஸ்கின்களும் கிடைக்கும். இதன் காரணமாக தோற்றம் தனித்துவமாக இருக்கும்.


Tecno Pop 9 5G செல்போன் 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தொலைபேசியானது அகச்சிவப்பு (IR) டிரான்ஸ்மிட்டர் மற்றும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. NFC சப்போர்ட் உடன் இந்த பிரிவில் முதல் 5G ஃபோன் இது என்று கூறப்படுகிறது. 189 கிராம் எடை கொண்டது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  2. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  3. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  4. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  5. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  6. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
  7. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  9. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  10. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »