விளம்பரதாரர் உள்ளடக்கம்

பிரைவசிக்கு உத்தரவாதம் அளிக்கும் சாம்சங்கின் புதிய தொழில்நுட்பம்!

Written by Sponsored Content மேம்படுத்தப்பட்டது: 1 செப்டம்பர் 2020 19:03 IST

இப்போதைய ஆன்லைன் உலகத்தில், நமது தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்மார்ட்போனில் நமக்கு பிடித்த புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கின்றோம். அது பாதுகாப்பாக உள்ளதா என்றால் கேள்விகுறி தான்.

இவ்வாறு தனிப்பட்ட விஷயங்கள், நமக்குப் பிடித்த போட்டோக்கள், வீடியோக்கள் இருக்கும் நமது ஸ்மார்ட்போனை மற்றவர்கள் உபயோகிப்பது நமக்கு பிடிக்காது. நெருங்கிய நண்பர்கள் என்றாலும் சரி, குடும்ப உறுப்பினர்கள் என்றாலும் சரி, அவர்கள் நமது ஸ்மார்ட்போனைக் கேட்டால் கொடுத்துதான் ஆக வேண்டும். 

ஆனால், நம்மால் சர்வசாதாரணமாகக் கொடுத்துவிட முடியாது. அவர்கள் நமது தனிப்பட்ட தகவல்களை, பிரவுசர்களைப் பார்த்துவிடுவார்களோ? நமது மெசேஜ்களைப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறோம்.

இனி இந்த பிரைவசி பயம் தேவையில்லை. ஆம். பிரைவசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. வந்துவிட்டது சாம்சங்கின் புத்தம் புதிய தொழில்நுட்பம் Alt Z. மில்லினியல்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் மூலம், இனி நமது தனிப்பட்ட தரவுகளை நொடிப்பொழுதில் பத்திரப்படுத்திக் கொள்ள முடியும். குயிக் ஸ்விட்ச் மற்றும் இன்டெலிஜன்ட் கன்டன்ட் என்ற தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் உலகில் இதுவே முதல் முறையாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலாதாரமாக இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

குயிக் ஸ்விட்ச் தொழில்நுட்பம் என்பது நொடிப்பொழுதில் நமது தரவுகளை பாதுகாக்கும் அம்சம் ஆகும். மற்றவர்களிடம் நமது ஸ்மார்ட்போனைக் கொடுக்கும் முன்பு இந்த குயிக் ஸ்விட்சை ஆன் செய்தாலே போதும். Alt Z ஆக்டிவேட் ஆகிவிடும்.
 

தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க உதவும் 'குயிக் ஸ்விட்ச்'

ஏற்கனவே கூறியபடி, மில்லினியல்கள் ஒவ்வொருவரும் பொது விஷயங்கள், தனிப்பட்ட விஷயங்கள் என இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். குயிக் ஸ்விட்ச் அம்சமானது இந்த இரண்டையும் நொடிப்பொழுதில் மாற்றிக் கொள்ள உதவுகிறது.

தாரணத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் கேலரியில் போட்டோக்கள் உள்ளது. அதில் சில படங்கள் உங்கள் தனிப்பட்ட விஷயங்களைச் சார்ந்த புகைப்படங்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் நண்பர்கள்/குடும்ப உறுப்பினர்கள் கேட்கிறார்கள். 

இப்படியான சூழலில் குயிக் ஸ்விட்ச்சை இயக்கினால் போதும். உங்கள் தனிப்பட்ட படங்கள் அப்படியே பிரைவசியாக பாதுகாக்கப்படும். மற்றவர்களுக்கு அந்தப் படங்கள் தெரியாது. மீண்டும் குயிக் ஸ்விட்சை முடக்கினால் தான் நீங்கள் பிரைவேட் செய்திருந்த படங்கள், தரவுகள் தெரியும்.

பிரைவசிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய ஸ்மார்ட்போன்களில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதுகாப்பான ஃபோல்டரை நீங்களே உருவாக்கி அதில் கேலரி, ஆப்ஸ், பிரவுசர் போன்ற உங்கள் தனிப்பட்ட விஷயங்களை போட்டுக் கொள்ளலாம்.

குயிக் ஸ்விட்சை இயக்குவதற்கு பவர் பட்டனை இருமுறை தட்டினால் போதும். உடனே பிரைவசி மோட் ஆன் ஆகிவிடும். மீண்டும் பவர் பட்டனை இருமுறைத் தட்டினால், பிரைவசி மோட் ஆஃப் ஆகி, நார்மல் மோடுக்கு வந்து விடும். இதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறித்த விளக்கங்களுக்கு கீழ்க்கணட வீடியோவைப் பார்க்கவும்..
 

கன்டன்ட் சஜஷன்:

கன்டன்ட் சஜஷன் எனப்படும் உள்ளடக்க பரிந்துரைகள் என்பது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தொழில்நுட்பம் ஆகும். இது உங்கள் போனில் எந்த தரவுகளை எல்லாம் நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கும். அதன்படி, நீங்கள் எளிமையாக உங்கள் தனிப்பட்ட விஷயங்களை அடையாளங் கண்டு அதை பாதுகாப்பான பிரைவேசி ஃபோல்டருக்கு மாற்றிவிடலாம். இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படுகிறது. முதலில் செட்டப் முடித்தவுடன், AI தொழில்நுட்பம் உங்கள் கேலரி முழுவதும் அலசி ஆராய்ந்து பிரைவசி தொடர்பான படங்களை அடையாளங் காணுகிறது. அதன்பிறகு, அவற்றை தொகுத்து உங்களுக்கு வழங்குகிறது. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பார்க்கவும்.

சாம்சங்கின் புத்தம் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய ஸ்மார்ட்போன்களில் குயிக் ஸ்விட்ச் மற்றும் கன்டன்ட் சஜஸன் அம்சங்கள் உள்ளன. நீங்கள் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால், உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உடனே சாம்சங் கேலக்ஸி A71 அல்லது கேலக்ஸி A51 ஸ்மார்ட்போனுக்கு மாறவும்.

சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 ஸ்மார்ட்போன்கள் அனைத்து ரீடெயில் கடைகளிலும், சாம்சங் ஆன்லைன் ஷாப்பிங்கிலும், முன்னனி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் கிடைக்கும்.

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobiles, samsung galaxy a71, samsung galaxy a51
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  2. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  3. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  4. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
  5. iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
  6. Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
  7. Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
  8. Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு
  9. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  10. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.