சாம்சங் நிறுவனம் அடுத்த கட்ட டெக்னாலஜிக்கு தாவ உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் அடுத்த கட்ட டெக்னாலஜிக்கு தாவ உள்ளது.
சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 ஜி தொழில்நுட்ப சிப்களையும், மோடம்களையும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாம்சங் வர்த்தக பிரிவு தலைவர், இன்யூப் காங் கூறுகையில், 'புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதில் சாம்சங் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. மொபைல் தொழில் நுட்பத்தில் தனித்து விளங்கும் சாம்சங் இனி 5ஜி டெக்னாலஜியையும் தொடங்க இருக்கிறது' என்றார்.
முன்னதாக கேலக்ஸி எஸ்10 மொபைல் போன் தென்கொரியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக சாம்சங் அறிவிப்பு செய்திருந்தது. இந்த போன் 5 ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி எஸ். 10 மொபைலில் விலை எவ்வளவு இருக்கும் என்பதை சாம்சங் வெளியிடவில்லை. அதிகபட்சமாக இந்திய மதிப்பில் ரூ. 93 ஆயிரம் வரை இந்த போனின் விலை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் சாம்சங் மட்டுமே 5 ஜி தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் சாம்சங்கின் குறிப்பிட்ட மொபைல் வகைகளை உபயோகிப்போருக்கு 5 ஜி சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்