Photo Credit: Twitter/ Samsung India
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் புதிதாக F சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், A, M, S வரிசைகளில் விலைக்கு தகுந்தாற் போல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. பட்ஜெட் விலையில் தொடங்கி ப்ரீமியம் விலை வரையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன. இதனால் சாமானிய வாடிக்கையாளர்கள் முதல் அனைவருக்கம் ஏற்ற விதமாக சாம்சங் உள்ளது.
இந்த நிலையில், தற்போது கேலக்ஸியில் புதிதாக F என்ற சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக சாம்சங் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும், எவ்வளவு ரூபாய் இருக்கும் என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
இருப்பினும் பெஞ்ச்மார்க் தளத்தில் கூறப்படும் தகவலின்படி, சாம்சங் F சீரிஸ் ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 9611 SoC பிராசசர், 6ஜிபி, சாம்சங்கின் சொந்த தயாரிப்பு கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அமோலேட் டிஸ்பிளே இருக்கலாம் என்றும் ஒட்டு மொத்தமாக ஒரு பட்ஜெட் விலையில் அதாவது 15,000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Is this the end of the Samsung Galaxy Note series as we know it? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்