சாம்சங் M தொடரில் தற்போதைய புதிய வெர்ஷனான 'கேலக்சி M40' இன்று அமேசானில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம், ஜூன் 11 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சாம்சங் M தொடரில், நான்காவது ஸ்மார்ட்போனான இந்த 'கேலக்சி M40' இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர், 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொன்ற அம்சங்களை கொண்டு வெளியாகிள்ளது.
சாம்சங் 'கேலக்சி M40': விலை!
சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், இந்தியாவில் வெளியானது. 6GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 19,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சீவாட்டர் ப்ளூ (Seawater Blue) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
சாம்சங் 'கேலக்சி M40': சிறப்பம்சங்கள்!
இந்த சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் FHD+ இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 32 மெகாபிக்சல் கேமராவுடன் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரி அளவுடன், 18W அதிவேக சார்ஜர் கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்