கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான எம்20 மற்றும் எம்10 ஸ்மார்ட்போன்கள் வெளியானதை தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சுமார் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தகவல்!
இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட இரண்டு கேலக்ஸி எம் வகை போன்களின் வெற்றியை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிற கேலக்ஸி எம்30 ரூபாய் 15,000 முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் இதுகுறித்து கசிந்துள்ள தகவல் படி இந்த கேலக்ஸி எம்30 மூன்று பின்புற கேமராக்களுடன் வெளிவருகிறது.
5000mAh பேட்டரி பவர், சூப்பர் அமோலெட் திரை போன்ற பல முக்கியம்சங்களுடன் சாம்சங் எம்30 விற்பனைக்கு வெளியாக தயாராகி உள்ளது. 4/6 ஜிபி ரேம் மற்றும் 64/128 ஜிபி சேமிப்பு வசதி என இரண்டு வகையான மாடல்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான எம்20 மற்றும் எம்10 ஸ்மார்ட்போன்கள் (ரூ.10,900 மற்றும் 7,990) வெளியானதை தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பட்ஜட் போனாக வலம் வரும் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கவே இந்த இரண்டு எம் வகை போன்களும் விலை குறைவாகவே விற்பனை செய்யப்பட்ட நிலையில் எம்30 வகை ஸ்மார்ட்போனும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்கப்படுகிறது.
அமேசான் தளத்தில் ‘சோல்டு- அவூட்' அகிய நிலையில் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் விற்பனை தளம் எம்30 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Poco M8 5G India Launch Date Announced: Expected Specifications, Features