சாம்சங் கேலக்ஸி M30 மற்றும் கேலக்ஸி M20 ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் அதிரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் தளங்களில் இந்த ஆஃபரைப் பெற முடியும். மேலும் எக்ஸ்சேஞ்ச ஆஃபர்களும் இந்த தள்ளுபடியுடன் உண்டு. அமேசான் தளம், சில நாட்களுக்கு முன்னர்தான் ‘ஃப்ரீடம் சேல்'-ஐ முடித்த நிலையில், இந்த தள்ளுபடி அறிவிப்பு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி M20, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது கேலக்ஸி M10 போனும் அறிமுகமானது. அதைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் கேலக்ஸி M30 போனும் அறிமுகமானது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள ஆஃபர்படி, சாம்சங் கேலக்ஸி M30 போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன், 13,990 ரூபாய்க்கு விற்கப்படும். இதன் முந்தைய விலை, 14,990 ரூபாயாக இருந்தது. அதே போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 16,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதன் விலை 17,990 ரூபாய் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி M20-யின் 3ஜிபி + 32ஜிபி வகை 9,990 ரூபாய்க்கு கிடைக்கும். அதே நேரத்தில் அந்த போனின் 4ஜிபி + 64ஜிபி வகை 11,990 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த இரண்டு போன்களின் விலைகள் முறையே 1000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளன.
அமேசான் தளத்தில், இந்த போன்களை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கினால், உடனடி 5 சதவிகித கேஷ்-பேக் கொடுக்கப்படும். அனைத்து போன்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் உள்ளன.
கேலக்ஸி M வரிசை போன்களுக்கு போட்டியாக ரியல்மீ மற்றும் சியோமீ நிறுவனங்கள் அடுத்தடுத்து பல ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. ரியல்மீ நிறுவனம், வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 ப்ரோ போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. சியோமீ நிறுவனம், வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, எம்ஐ ஏ3 போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அனைத்து போன்களும் சாம்சங் கேலக்ஸி M வரிசை போன்களுடன் போட்டியிடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்