குறைந்த விலையில் சாம்சங்கின் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் நாளை வெளியாகிறது!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 1 ஜூன் 2020 14:38 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy M11 was launched in the UAE in March
  • Both new Samsung phones will go on sale shortly after their launch
  • Samsung Galaxy M01 would carry a price of Rs. 8,999

குறைந்த விலையில் சாம்சங்கின் இரண்டு அட்டகசமான ஸ்மாட்போன்கள் நாளை வெளியாகிறது!

Photo Credit: Flipkart

சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11 ஆகியவை பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் நாளை முதல் இந்திய சந்தையில் கிடைக்க உள்ளன. இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. சாம்சங் கேலக்ஸி எம் 11 மார்ச் மாதம் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, அந்த போனின் விவரங்கள் ஏற்கனவே வெளிவந்தது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எம் 01-ன் விவரங்களையும் பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டது.

இந்த இரண்டு போன்களையும் பிரபல ஆன்லைன் இ-வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டில் பெறலாம். இந்த போன்களின் டீசர்களை ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்ததது. நாளை நண்பகல் 12 மணி முதல் இந்த போன் விற்பனை தொடங்கும் என தெரிகிறது. 

சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11 விலை (வதந்திகள்)

பிளிப்கார்ட் வெளியிட்ட டீசரில் இந்த இரண்டு போன்களின் விலை விவரத்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்கள் படி, சாம்சங் கேலக்ஸி எம் 01-ன் விலை ரூ.8,999-ல் தொடங்குகிறது. அடிப்படை வேரியண்டில் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். மறுபுறம், சாம்சங் கேலக்ஸி எம் 11-ன் விலை ரூ.10,999-ல் தொடங்கலாம். இந்த போனின் அடிப்படை வேரியண்டிலும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 11 விவரங்கள்:

டூயல்-சிம் Samsung Galaxy M11, 6.4 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் இருக்கலாம். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் சாம்சங் சிப்செட்டை பெயரிடவில்லை. இந்த போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.

கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. இந்த போனில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி, வைஃபை 802.11, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ மற்றும் கலிலியோ உள்ளன. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.


சாம்சங் கேலக்ஸி M01 விவரங்கள்:

Samsung Galaxy M01, 5.71 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் இருக்கும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும். 

தொலைபேசியின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புறத்தில் ஒரு கேமரா இருக்கும். 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போனில் 5W சார்ஜிங் இருக்கும்.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
  2. 7000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே! Motorola-வின் புதிய கிங் Moto G67 Power 5G - இந்தியாவுக்கு வருது!
  3. சத்தம் போட்டாலும் காது கேட்காது! 55dB ANC உடன் Oppo Enco X3s TWS Earphones அறிமுகம்
  4. Nothing Phone 3a Lite: Glyph Light, Dimensity 7300 Pro, 50MP Camera – முழு விவரம்
  5. ₹6,000 பட்ஜெட்டில் 4K Streaming! Amazon Fire TV Stick 4K Select - புதிய Vega OS, Alexa Voice Remote அம்சங்களுடன்!
  6. OPPO Find X9, Dimensity 9500 உடன் கூடிய Find X9 Pro அறிவிக்கப்பட்டது: விலை, விவரக்குறிப்புகள்
  7. Realme C85 Pro Geekbench Listing! 7000mAh பேட்டரி, Snapdragon 685: விலை செக் பண்ணுங்க!
  8. S26 சீரிஸ்ல Samsung-ன் மாஸ்டர் பிளான்! Bluetooth 6.1 சப்போர்ட்டுடன் Exynos S6568 சிப்!
  9. iQOO Neo 11 வருகிறான்! 7500mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே-னு வெறித்தனம் அக்டோபர் 30 லான்ச்
  10. Redmi Turbo 5-ன் புதிய லீக்! 1.5K டிஸ்பிளே, IP68 ரேட்டிங்: Poco X8 Pro-வா இந்தியாவுக்கு வரும்?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.