சாம்சங் நிறுவனம் வெறும் 5,499 ரூபாய்க்கு கேலக்ஸி M01 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியன்ட் போலவே கேலக்ஸி M01 உள்ளது
சாம்சங் தரப்பில் மிகக்குறைந்த விலையில் கேலக்ஸி M01 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு என்றே தனி வாடிக்கையாளர்கள் உண்டு. விலைக்கு ஏற்ப தரம், நீடித்து உழைக்கும் தன்மை போன்ற பண்புகளால் சாம்சங் பெயர் பெற்றது. ஆனால், ரெட்மி, ரியல்மி போன்ற ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பின்பு சாம்சங் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியது.
அந்த வகையில், தற்போது மிகக்குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி M01 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் 5,499 ரூபாய் ஆகும். கேலக்ஸி M01 ஸ்மார்ட்போனில் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம், பின்பக்க கேமரா, 32 ஜிபி மெமரி வழங்கப்படுகின்றன.
1ஜிபி ரேம், 16ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி M01 வேரியன்டின் விலை ரூ.5,499 என்றும், 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை ரூ.6,499 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கருப்பு, நீலம், சிவப்பு என மூன்று விதமான கலர்களில் வருகின்றது இந்த போன்.
நாளை (ஜூலை 29) முதல் சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை சாம்சங் ஷோரூம், ரீடெயில் கடைகள், ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற்றுக் கொள்ளலாம்.
சுருக்கமான சிறப்பம்சங்கள்:
சிம்: டூயல் சிம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு கோ
திரை: 5.3 இன்ச் TFT டிஸ்பிளே
பிராசசர்: குவாட் கோர் மீடியாடெக் 6739 SoC பிராசசர்
ரேம்: 1ஜிபி, 2ஜிபி
கேமரா:
8 மெகா பிக்சலுடன் பின்பக்க கேமரா,
5 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா
பேட்டரி சக்தி: 3,000 mAh
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show