இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள, சாம்சங் இந்தியா ரூ.20 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது.
PM CARES Fund-க்கு - ரூ.15 கோடியும்,
உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு - ரூ.5 கோடியும் வழங்கியுள்ளது.
Samsung தனது சாம்சங் ஸ்மார்ட் ஹெல்த்கேர் குடியுரிமை திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் டிஜிட்டல் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்களை வழங்கியுள்ளது. மருத்துவமனைகளுக்கு ஏராளமான வெப்பமானிகளை வழங்கி ஆதரவளித்து வருகிறது. மேலும், மருத்துவ வசதிகளில் சுற்றுப்புற காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த ஏர் பியூரிஃபையர்களும் வழங்கப்படுகின்றன.
நிறுவனம், coronavirus-க்கு எதிரான தடுப்பு இயக்கத்தில் தேவையான மருத்துவ உபகரணங்களை, நொய்டாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. மேலும், உள்ளூர் மக்களுக்கு தினசரி உணவு பாக்கெட்டுகளை வழங்குவதில், உள்ளூர் நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும், சாம்சங் ஆதரவளித்து வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்