Samsung Galaxy Z Fold 8-ன் அடுத்த மாடல் பற்றிய தகவல் GSMA டேட்டாபேஸில் கசிந்துள்ளது
Samsung-ஐப் பொறுத்தவரைக்கும், ஃபோல்டபிள் (Foldable) ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுல அவங்கதான் ராஜான்னு சொல்லலாம். ஒவ்வொரு வருஷமும் புது அப்டேட் கொடுத்துட்டே இருக்காங்க. இப்போ 2026-ல் வரப்போகிற Samsung Galaxy Z Fold 8 சீரிஸ் பத்தி ஒரு செம்ம லீக் வந்திருக்கு! அதுவும் ரெண்டு மாஸ் மாடல்களை லான்ச் பண்ண Samsung பிளான் பண்ணுறாங்களாம்!சமீபத்துல GSMA டேட்டாபேஸ்-ல ஒரு புது மாடல் நம்பர் (SM-F971U) பட்டியலிடப்பட்டிருக்கு. முதல்ல இது ஒரு பட்ஜெட் Flip மாடலா இருக்கும்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, இப்போ வந்திருக்கிற ரிப்போர்ட்டுகள் என்ன சொல்லுதுன்னா, இது ஒரு புது விதமான, அகலமான (Wider) Galaxy Z Fold 8 மாடல்-ஆ இருக்கலாம்!சாம்சங்-இன் மாடல் நம்பரிங் சிஸ்டத்தை வச்சு பார்த்தா, 'F9xx' சீரிஸ் எல்லாமே Fold மாடல்கள்தான். அதனால இந்த SM-F971U, Fold சீரிஸைச் சேர்ந்ததுங்கிறது கன்ஃபார்ம். இந்த புதிய மாடலுக்கு 'H8' என்ற கோட்நேமும் பயன்படுத்தப்படுது. வழக்கமான Fold சீரிஸ் ('Q' கோட்நேம்) போல இல்லாம, இந்த 'H8' கோட்நேம், Fold 8-உடன் சேர்த்து இன்னொரு ஹை-எண்ட் மாடலையும் Samsung லான்ச் பண்ணத் தயாராகிறதுன்னு காட்டுது!
ஏன் இந்த இரண்டாவது Fold மாடல்? ஏன்னா, இவ்வளவு நாளா Galaxy Z Fold போன்கள்ல இருக்கிற பெரிய குறையே, அதுல இருக்குற குறுகலான கவர் ஸ்க்ரீன் தான்! போனை மடிச்சிருக்கும்போது, அது ரொம்ப நீளமா இருக்குன்னு நிறைய பேர் கம்ப்ளைன்ட் பண்ணிருந்தாங்க. இப்போ லீக் ஆன தகவல் படி, இந்த புது Wider Fold மாடல்ல, வெளியில இருக்குற கவர் டிஸ்பிளே 18:9 ரேஷியோவில் அகலமா இருக்குமாம். அப்புறம், உள்ளே இருக்குற பெரிய டிஸ்பிளே, ரெண்டு 18:9 ஸ்க்ரீன்களை இணைத்தது போல, 18:18 ரேஷியோவில் கிட்டத்தட்ட சதுரமா (Square) இருக்கும்! போன் மடிச்சிருக்கும்போது நார்மல் ஸ்மார்ட்போன் மாதிரி ஃபீல் கொடுக்கிறதுதான் Samsung-இன் நோக்கம்.
இந்த Wide Fold டிசைன் பிளானுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு. அது, Apple! ஆமாங்க, 2026-ல் Apple தன்னோட முதல் ஃபோல்டபிள் ஐபோனை லான்ச் பண்ண பிளான் பண்ணுது. அதுவும் இந்த Wide மற்றும் Compact ஃபார்ம் ஃபேக்டர்ல வரலாம்னு சொல்லப்படுது. சோ, Apple-க்கு முன்னாடியே ஒரு செம்ம போட்டியைக் கொடுக்க Samsung இந்த புது டிசைனை ரெடி பண்ணிட்டு இருக்கு!
இந்த GSMA லிஸ்டிங்ல இருக்கிற 'U'ங்கிற எழுத்து, இந்த மாடல் முதல்ல US மார்க்கெட்டுக்கு வரப்போகுதுன்னு காட்டுது. Apple-ஐ எதிர்த்து சண்டை போட, Samsung அமெரிக்க மார்க்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறாங்க!
மொத்தத்துல, 2026-ல் Samsung Galaxy Z Fold 8 மற்றும் ஒரு Wider Fold மாடல்ன்னு ரெண்டு ஃபோல்டபிள் மாடல்களை நாம பார்க்கலாம்னு எதிர்பார்க்கலாம்! இந்த புது Wide Fold மாடல் பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter