Samsung Galaxy Z Fold 6 Ultra அக்டோபர் 2024ல் வெளியாகும் என்கிற தகவல் பல இணையதளங்களில் கசிந்துள்ளது
Photo Credit: Samsung
Samsung’s Galaxy Z Fold 6 is available in India starting at Rs. 1,64,999
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy Z Fold 6 Ultra செல்போன் பற்றி தான்.
Samsung Galaxy Z Fold 6 Ultra அக்டோபர் 2024ல் வெளியாகும் என்கிற தகவல் பல இணையதளங்களில் கசிந்துள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அக்டோபர் 18 முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை தென் கொரியாவில் முன்கூட்டியே புக்கிங் ஆரம்பம் ஆகும். இதனை சாம்சங் இணையதளத்தில் இருந்து மட்டுமே வாங்க முடியும். உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்காது.
Samsung Galaxy Z Fold 6 Ultra மடிந்தால் 10.6மிமீ தடிமன் கொண்ட பெரிய 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14ல் இயங்கும் சாம்சங்கின் One UI 6.1.1 மூலம் இயங்குகிறது. மேல் பக்கம் 6.3-inch HD+ (968x2,376 pixels) Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உட்புறத்தில் 7.6-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
மடிக்கும்போது 11.5 மிமீ அகலம் இருக்கும். இது 8-இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே மற்றும் 6.5-இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 இன் 7.6-இன்ச் இன்டர்னல் மற்றும் 6.3-இன்ச் எக்ஸ்டர்னல் ஸ்கிரீன்களில் இருந்து சிறிது மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இரண்டு பேனல்களும் 1Hz மற்றும் 120Hz வரையிலான அடாப்டிவ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளன. பின்பக்கம் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
மேலும் கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது. 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 25Wல் சார்ஜ் செய்யக்கூடிய சாம்சங்கின் வயர்டு சார்ஜருடன் தனித்தனியாக விற்கப்படுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP48 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Galaxy Z Fold 6 (Crafted Black variant) இந்தியாவில் சிறப்பு நிறமாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது பின்புற பேனலில் கார்பன்-ஃபைபர் மூலம் செய்யப்பட்டது போன்ற ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த போஸ்டரின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இயலாது என்பதால், கொரியா சில்லறை விற்பனையாளரின் இணையதளத்தில் காட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சாம்சங் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket