Samsung Galaxy S9 மற்றும் Galaxy S9+ ஆகியவை இந்தியாவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளன. சமீபத்திய அப்டேட் சாம்சங்கின் One UI 2 மற்றும் ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. நவம்பர் மாதத்தில், சாம்சங் தனது ஆண்ட்ராய்டு 10 அப்டேட் சாலை வரைபடத்தை அறிவித்தது. இது Galaxy S9 மற்றும் Galaxy S9+-க்கான ஜனவரி வெளியீட்டைக் குறிக்கிறது. ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஆரம்பத்தில் Galaxy S10 மாடல்களை எட்டியது, சாம்சங் சமீபத்திய பதிப்பை Galaxy M20 மற்றும் Galaxy M30 மாடல்களுக்கு கடந்த மாதம் கொண்டு வந்தது. இது Galaxy S9 மற்றும் Galaxy S9+ ஆகியவற்றுக்கான தாமதத்தை எடுத்துக்காட்டுகிறது. இவை இரண்டும் மார்ச் 2018-ல் வெளியிடப்பட்டன.
சாம்சங் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, Samsung Galaxy S9-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட், உருவாக்க எண் G960FXXU7DTAA-ஐக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் Samsung Galaxy S9+-க்கான அப்டேட், உருவாக்க எண் G965FXXU7DTAA-ஐக் கொண்டுள்ளது. இரண்டு மென்பொருள் தொகுப்புகளும் ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் வந்து One UI-வை 2018 சாம்சங் ஃபிளாக்ஷிப்களுக்கு கொண்டு வருகின்றன.
அதிகாரப்பூர்வ ஆவணங்களில் வழங்கப்பட்ட சேஞ்ச்லாக், Samsung Galaxy S9 மற்றும் Galaxy S9+ ஆகிய இரண்டிற்குமான சமீபத்திய புதுப்பிப்பு ஒரு பிரத்யேக டார்க் மோட், மேம்பட்ட அனிமேஷன்கள், புதிய navigation சைகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒன்-ஹேண்டட் மோடைக் கொண்டுவருகிறது என்பதைக் காட்டுகிறது. Calculator, Camera, Internet, Samsung Contacts மற்றும் Calendar போன்ற முன்பே ஏற்றப்பட்ட செயலிகளுக்கான அப்டேட்டுகள் உள்ளன. மேலும், இந்த அப்டேட் புதிய Digital Wellbeing பதிப்பைக் கொண்டுவருகிறது. அதில் Focus mode மற்றும் parental controls உள்ளன.
Galaxy S9 மற்றும் Galaxy S9+-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழக்கமான பயனர்களுக்கு இந்தியாவில் கிடைக்கிறது என்று சாம்சங்-மையப்படுத்தப்பட்ட வலைப்பதிவு சாம்மொபைல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், இது ஆரம்பத்தில் மற்ற சந்தைகளில், குறிப்பாக பீட்டா சோதனையாளர்களுக்காக வெளிவருகிறது. ட்விட்டரில் சில பயனர்கள் இந்தியாவில் பொதுவாக செல்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
உங்கள் Samsung Galaxy S9 அல்லது Galaxy S9+ யூனிட்டில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டின் கிடைக்கும் தன்மையை சரிபார்த்து, Settings > Software update-க்குச் சென்று புதிய அனுபவத்தைப் பதிவிறக்கலாம்.
இந்த வார தொடக்கத்தில், சாம்சங் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் Galaxy S9 சீரிஸ்க்கான ஆண்ட்ராய்டு 10-ஐ One UI 2.0 உடன் வெளியிடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சாதனங்களின் பட்டியலுக்கான அப்டேட் சாலை வரைபடத்தை (update roadmap) அறிவித்த சிறிது நேரத்திலேயே, இந்தியாவில் Samsung Galaxy S9 மற்றும் Galaxy S9+ பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 10-ஐ சோதிக்க One UI 2.0 பீட்டா திட்டத்தைத் (started One UI 2.0 Beta Program) தென் கொரிய நிறுவனம் தொடங்கியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்