Samsung Galaxy S26 சீரிஸ் போன்களில் Faster Wireless Charging ஆதரவு இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Ultra, Galaxy S25 Ultra-வை (படம்) வெற்றிபெறக்கூடும்
Samsung-ன் அடுத்த மாஸ் ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஆன Samsung Galaxy S26 Series பத்தின லீக்ஸ் வந்துகிட்டே இருக்கு. இப்போ வந்திருக்கிற அப்டேட்ல, வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீடில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகுதுன்னு சொல்லியிருக்காங்க. இந்த Galaxy S26 Series பிப்ரவரி 25, 2026 அன்று Galaxy Unpacked 2026 ஈவென்ட்ல லான்ச் ஆகலாம்னு எதிர்பார்க்கப்படுது. இப்போ வயர்லெஸ் சார்ஜிங் அப்டேட் பத்தி பார்க்கலாம். Samsung நிறுவனம் கிட்டத்தட்ட ஆறு வருஷமா அவங்களுடைய ஃபிளாக்ஷிப் S சீரிஸ் போன்கள்ல (Galaxy S20-ல இருந்து S25 வரை) வெறும் 15W Wireless Charging-ஐ தான் கொடுத்துட்டு வந்தாங்க. இது ஒரு பெரிய குறையா இருந்துச்சு.
ஆனா, இப்போ லீக் ஆன தகவல்படி, Galaxy S26 Series-ல இந்த வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட் அப்கிரேட் ஆகுது!
இந்த Galaxy S26 மாடலின் Dimensions (பரிமாணங்கள்) குறித்த விவரங்களையும் அந்த டிப்ஸ்டர் ஷேர் பண்ணிருக்காரு. S26 Ultra 7.9mm தடிமனாகவும், S26 6.9mm தடிமனாகவும் இருக்கும்னு சொல்லியிருக்காங்க.
மொத்தத்துல, Samsung Galaxy S26 Series பெரிய கேமரா அப்கிரேடை தவிர்த்து, Faster Wireless Charging மற்றும் Display Size-ல ஒரு சின்ன அப்கிரேடைக் கொண்டு வரப்போகுது. 6 வருஷத்துக்குப் பிறகு வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட் மாறுறது நல்ல விஷயமா இருந்தாலும், 25W போதுமான்னு நீங்கதான் சொல்லணும்.
இந்த Faster Wireless Charging அப்டேட் உங்களுக்கு பிடிச்சிருக்கா? Galaxy S26-ன் 6.3-inch Display உங்களுக்கு போதுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Movingstyle Touchscreen Display Launched With Up to Three Hours Battery Life; Movingstyle M7 Tags Along