Samsung Galaxy S26 மற்றும் S26+ ஸ்மார்ட்போன்களின் CAD Renders லீக் ஆகியுள்ளன.
Photo Credit: Samsung
Galaxy S26, S26+ லீக் ரெண்டர்களில் ரைஸ்டு கேமரா, பிளாட் டிஸ்ப்ளே வெளிப்படை
Samsung-ன் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் போன்களான Samsung Galaxy S26 மற்றும் Galaxy S26+ பத்தின லேட்டஸ்ட் அப்டேட் வந்திருக்கு. இந்த போன்கள் அடுத்த வருஷம் ஜனவரியில லான்ச் ஆகும்னு எதிர்பார்க்கப்படுற நிலையில, இப்போ இதோட CAD Renders லீக் ஆகி வடிவமைப்பு மாற்றங்களை வெளிப்படுத்தியிருக்கு. இந்த CAD Renders-ல இருந்து தெரியுற முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த ரெண்டு போன்களுமே Galaxy S25 Edge மாடலை போலவே, பின்னாடி Raised Camera Island (சிறிதளவு மேடான கேமரா செட்டப்) உடன் வரலாம். போன S25 சீரிஸ்-ல கேமரா லென்ஸ்கள் தனித்தனியா இருந்தது. ஆனா, இப்போ லென்ஸ்கள் எல்லாம் ஒரு Pill-shaped கேமரா டெக்கோவுக்குள்ள அமைந்திருக்கும். இந்த மாற்றம் S சீரிஸ்-க்கு ஒரு புதிய லுக்கைக் கொடுக்கும்.
லீக் ஆன இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னன்னா, Galaxy S26 மற்றும் S26+ போன்களின் உள்ளே Magnets இருக்கும். இது Qi2 Wireless Charging டெக்னாலஜிக்கு சப்போர்ட் பண்ணலாம்னு எதிர்பார்க்கப்படுது. இது மூலமா, வயர்லெஸ் சார்ஜிங் அலைன்மென்ட் கரெக்டா இருக்கும்.
இந்த இரண்டு மாடல்களும் Exynos 2600 அல்லது Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்-ஓட வரும்னு எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரை, 50MP Main Sensor உட்பட Triple Rear Camera செட்டப் இருக்கும்னு சொல்லப்படுது.
மொத்தத்துல, Samsung Galaxy S26 சீரிஸ் டிசைன்ல சின்ன சின்ன மாற்றங்கள் வந்தாலும், Raised Camera Island மூலமா ஒரு புதிய அடையாளத்தை கொடுக்கப் போறாங்க. இந்த புதிய Raised Camera Island டிசைன் உங்களுக்கு பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்