Photo Credit: Gadgets 360
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy S24 செல்போன் பற்றி தான்.
Samsung Galaxy S24 செல்போனை சரியான டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்ட பிரியர்களுக்கு Amazon Great Freedom Festival Sale சரியான நேரம் வந்துவிட்டது. Samsung Galaxy S24 ஆனது 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 74,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. இப்போது ரூ.62,999 என்கிற சலுகை விலையில் கிடைக்கிறது. 256ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79,999 பாதிலாக ரூ. 67,999 விலைக்கு கிடைக்கிறது. 512GB மெமரி மாடல் விலை ரூ. 89,999 என இருக்கும் நிலையில் சலுகை விலையாக ரூ. 77,999க்கு கிடைக்கிறது. இதுவே அமேசானில் Galaxy S24 ரூ. 56,000 என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. Flipkart தளத்தில் ரூ. 62,000 விலையில் இருந்து ஆரம்பம் ஆகிறது.
குவாட் எச்டி அமோலெட் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூமிங், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கட்டணமில்லா EMI வசதி மூலமும் இந்த செல்போனை வாங்கலாம். இந்த சலுகை அடுத்த வாரம் வரை செல்லுபடியாகும்.
Samsung Galaxy S24 மாடல் 6.2-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே கொண்டுள்ளது. விஷன் பூஸ்டர் அம்சத்தை கொண்டுள்ளது. Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் மூலம் இயக்கப்படுகிறது. Exynos 2400 SoC சிப்பையும் கொண்டுள்ளது. மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இது 12 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் கேமரா கொண்டுள்ளது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கட்டமைப்புக்கான IP68 மதிப்பீடு கொண்டுள்ளது. இது 25W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 4,000mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த போனில் டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்கள் வேறு எந்த போனிலும் இல்லாதபடி மூக்கில் விரல் வைக்கும்படி வருகின்றன.
100x ஸ்பேஸ் ஜூமிங் வருகிறது. இதுபோக 4K மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. Laser Autofocus சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிரீமியம் போன்களில் வரும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் One UI 6.1 மற்றும் Android 14 OS உடன் வருகிறது. 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொண்டிருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்