Samsung-ன் அடுத்த ஸ்மார்ட்போன் Galaxy S10 Lite!

Samsung-ன் அடுத்த ஸ்மார்ட்போன் Galaxy S10 Lite!

Samsung Galaxy S10 Lite வதந்தியான தொலைபேசியாகவும், S10 வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy S10 Lite, Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது
  • போன் 8GB RAM கொண்டிருக்கிறது. ஆனால், சேமிப்பு விவரங்கள் பற்றி தெரியவில்லை
  • துவக்கத்தில் Android 10-ஐ இயக்கும்
விளம்பரம்

கடந்த காலங்களில் Samsung Galaxy S10 Lite-ல் சாம்சங் பணிபுரிந்து வருவதாக பலமான வதந்திகள் வந்தன. இந்த ஸ்மார்ட்போன் Galaxy S10-ன் சற்றே toned-down பதிப்பு என்று வதந்தி பரவியது. ஆனால், அதைப் பற்றி நிறைய தகவல்கள் எங்களிடம் இல்லை. SM-G770F மாடல் எண்ணைக் கொண்ட Geekbench-ன் தரவுத்தளத்தில் சமீபத்தில் Samsung pho d காணப்பட்டது. இது வரவிருக்கும் Galaxy S10 Lite என்று கருதப்படுகிறது. தரவுத்தளம், ஸ்மார்ட்போனின் பெயரை வெளிப்படுத்தவில்லை என்றாலும், விவரக்குறிப்புகள் முந்தைய வதந்திகளுடன் பொருந்துகின்றன.

Samsung Galaxy S10 Lite-ன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

வதந்தியான Samsung Galaxy S10 Lite, ஒரு Qualcomm Snapdragon 855 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இது முதலில் Geekbench-ல் Galaxyclub மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. Samsung Galaxy S10 சீரிஸ் Qualcomm Snapdragon 855 SoC உடன் உலகின் ஒரு சில பகுதிகளில் அனுப்புகிறது. Samsung Galaxy S10 Lite-ல் 8 ஜிபி ரேம் உள்ளது. இது Geekbench பட்டியலில் காணப்படுகிறது. இதன் விவரக்குறிப்புகள் இந்த மாத தொடக்கத்தில் வெளிவந்த முந்தைய வதந்திகளுக்கு ஏற்ப உள்ளன. ஆர்வமுள்ளவர்களுக்கு, Samsung Galaxy S10 Lite முறையே Geekbench 5-ன் single-core மற்றும் multi-core சோதனைகளில் 742 மற்றும் 2,604 மதிப்பெண்களைப் பெற்றது.

samsung galaxy s10 lite galaxyclubnl Samsung Galaxy S10 Lite Leak

Photo Credit: Geekbench

சுவாரஸ்யமாக, Samsung Galaxy S10 Lite-ஐ ஆண்ட்ராய்டு 10 இயங்குவதாகக் காணப்படுகிறது. மேலும், இது One UI 2.0-ஐ இயக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் சாம்சங் பல ஸ்மார்ட்போன்களில் வேலை செய்வதோடு, Galaxy A90 5G மற்றும் Galaxy A91 உள்ளது போன்றே இந்த Galaxy S10 Lite-யிலும் விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. Samsung Galaxy A91 சமீபத்தில் ஆன்லைனில் வெளிவந்ததோடு, Qualcomm Snapdragon 855 SoC, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு போன்ற முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியது. சேமிப்பக விரிவாக்கத்திற்காக பிரத்யேக microSD card slot இருப்பதாகவும் வதந்தி பரவியது.

Galaxy S10 Lite பற்றிய கூடுதல் விவரங்கள் தற்போது தெரியவில்லை. இருப்பினும், Samsung Galaxy S11 வந்த பிறகு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படலாம் என்று யூகிக்கிறது. ஏனெனில், சாம்சங் வழக்கமாக அதன் முதன்மைத் தொடரை அண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்போடு அனுப்புகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy S10 Lite
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »