Samsung Galaxy Quantum 5 நிறுவனத்தின் சொந்த நாடான தென்கொரியாவில் வெளியிடப்பட்டது
Photo Credit: Samsung
Samsung Galaxy Quantum 5 is released in three colours
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy Quantum 5 பற்றி தான்.
Samsung Galaxy Quantum 5 நிறுவனத்தின் சொந்த நாடான தென்கொரியாவில் வெளியிடப்பட்டது. இது AI செயல்பாடுகள் மற்றும் குவாண்டம் கிரிப்டோகிராஃபி பாதுகாப்புடன் கூடிய Galaxy A55 மாடலின் மேம்பட்ட அப்டேட் ஆகும். Galaxy Quantum 5 மூன்று வண்ணங்களில் வந்துள்ளது. தென் கொரிய தொலைத்தொடர்பு நிறுவனமான SK டெலிகாமுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த செல்போன் மேம்பட்ட பாதுகாப்பிற்காக குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டர் (QRNG) சிப்பைக் கொண்டுள்ளது. இது மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி இருக்கிறது.
இந்திய மதிப்பில் ரூ. 38,700 வரும் என தெரிகிறது. தற்போது தென் கொரியாவில் Awesome Iceblue, Awesome Navy மற்றும் Awesome Lilac வண்ணங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இரட்டை சிம் சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 5 ஆனது ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. 6.6-இன்ச் முழு-எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. திரையில் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு உள்ளது, அதே சமயம் போனில் மெட்டல் பிளாட் பிரேம் உள்ளது.
2.75GHz கடிகார வேகத்துடன் செயல்படும் ஆக்டா-கோர் சிப்செட்டைக் கொண்டுள்ளது. இது Exynos 1480 SoC என தெரிய வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்தை கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை விரிவாக்க முடியும்.குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டர் (QRNG) சிப் உள்ளது. இது சாதனத்தில் உள்ள தரவின் குறியாக்கத்தை மேம்படுத்துகிறது. SK டெலிகாம் மற்றும் ஐடி குவாண்டிக் உடன் இணைந்து தென் கொரிய சந்தைக்காக சாம்சங் இந்த புதிய செல்போனை வடிவமைத்துள்ளது.
புளூடூத் 5.3, GPS, Glonass, Beidou, Galileo, QZSS, NFC, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் இணைப்பு வசதி உள்ளது. (OIS) வசதி கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 5-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. இது 32 மெகாபிக்சல் முன் பக்க கேமராவைக் கொண்டுள்ளது. சர்க்கிள் டு சர்ச் போன்ற AI அம்சங்களை ஆதரிக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supernova’s First Moments Show Olive-Shaped Blast in Groundbreaking Observations
Intense Solar Storm With Huge CMEs Forced Astronauts to Take Shelter on the ISS
Nearby Super-Earth GJ 251 c Could Help Learn About Worlds That Once Supported Life, Astronomers Say
James Webb Telescope May Have Spotted First Generation of Stars in the Universe