Samsung Galaxy Note 9 பயனர்களுக்கு ஓர் நற்செய்தி. Galaxy Note 9-க்கான நிலையான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை சாம்சங் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு புதிய அம்சங்கள் மற்றும் மென்பொருள் மாற்றங்களுடன் One UI 2.0-ஐ போனில் கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, சாம்சங், One UI 2.0 பீட்டா சோதனையில் பங்கேற்ற Galaxy Note 9 பயனர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை வெளியிட்டது. இப்போது பீட்டா அல்லாத சோதனையாளர்களுக்கான அப்டேட்டையும் நிலையான சேனல் வழியாகவும் தொடங்கியுள்ளது.
சாம்மொபைலின் அறிக்கையின்படி, ஜெர்மனியில் Galaxy Note 9 பயனர்கள் N960FXXU4DSLB என்ற பில்ட் எண்ணைக் கொண்ட நிலையான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளனர். இந்த அப்டேட் டிசம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் கொண்டுவருகிறது. இந்த வெளியீடு தற்போது ஜெர்மனிக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற சந்தைகளிலும் பயனர்களுக்கு விரிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் Galaxy Note 9-க்காக ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த கேஜெட்ஸ் 360, சாம்சங் இந்தியாவை அணுகியுள்ளது. மேலும், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிக்கும். இதற்கிடையில், போனின் Settings app-ல் உள்ள மென்பொருள் அப்டேட் பகுதிக்குச் சென்று உங்கள் போனில் அப்டேட் கிடைப்பதை மேனுவலாக சரிபார்க்கலாம்.
Galaxy Note 9-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை ஜனவரி மாதம் வெளியிடுவதாக Samsung உறுதியளித்திருந்தது. மேலும், கால அட்டவணையின்படி அவ்வாறு செய்யத் தொடங்கியது. சாம்சங், Galaxy Note 9 உடன், Galaxy S9, Galaxy S9+, Galaxy Note 9, Galaxy M20, Galaxy M30, Galaxy A30, Galaxy S10e, Galaxy S10, Galaxy S10+, Galaxy Note 10 மற்றும் Galaxy Note 10+ க்கான ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான One UI 2.0 அப்டேட்டையும் இம்மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்